Published:Updated:

புனே குண்டு வெடிப்பில் ஜோர்டானுக்கு தொடர்பு!

Vikatan Correspondent
புனே குண்டு வெடிப்பில் ஜோர்டானுக்கு தொடர்பு!
புனே குண்டு வெடிப்பில் ஜோர்டானுக்கு தொடர்பு!

புனே: புனேயில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கும்,  வளைகுடா நாடான ஜோர்டானுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று மகாராஷ்ட்ரா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புனேவில் நேற்று முன்தினம் இரவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் காயமுற்று இப்போது போலீஸ் காவலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தயானந்த் பாட்டீல், வளைகுடா நாடான ஜோர்டானில் 9 மாதங்கள் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

புனே குண்டு வெடிப்பில் ஜோர்டானுக்கு தொடர்பு!

இதன் மூலம் புனே தொடர் குண்டுவெடிப்புக்கும் ஜோர்டானுக்கும் இடையிலான தொடர்பு குறித்து புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளன.

மேலும் குண்டுகளை வெடிக்கச் செய்யும் "டைமர்களாக' கைக்கடிகாரமே பயன்படுத்தப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பொதுவாக, இந்திய முஜாகிதீன் போன்ற பயங்கரவாதக் குழுக்கள் இவ்விதமான உத்திகளைக் கையாளுவது வழக்கம்.

இந்நிலையில், இந்தக் குண்டு வெடிப்புகள் தொடர்பாக ஒரு சைக்கிள் கடை உரிமையாளரும் பணியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காயமுற்றவரிடம் வெடிபொருள்

பாலகந்தர்வா திரையரங்கு அருகே காயமுற்றவரின் கைப்பையில் வெடிப்பொருள் இருந்தது தெரிய வந்துள்ளது.காயமுற்றவரின் பெயர் தயானந்த் பாட்டீல்.அவர் ஒரு தையல்காரர்.பாலகந்தர்வா திரையரங்குக்கு எதிரே நடந்துவந்த அன்னா ஹசாரே அமைப்பினரின் தர்ணாவை பார்ப்பதற்காக உருலி கஞ்சன் எனும் கிராமத்திலிருந்து வந்ததாகவும்,அப்போது தனது கைப்பையில் ஒரு பெட்டி இருந்ததாகவும், அதில் என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்காக திறந்தபோது வெடித்ததாகவும் கூறியுள்ளார்.

இவர் சமீபத்தில் 9 மாதங்கள்  ஜோர்டானில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது கைப்பையில் வெடிபொருள் இருந்ததால் அவரிடம் போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். லேசாக காயமுற்றுள்ள அவர் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டு வருகிறது.

##~~##
அவர் மீது இந்திய குற்றவியல் சட்டத்தின் 307 (கொலை செய்ய முயற்சி), 427 (சேதம் ஏற்படுத்துதல்), 120 பி (குற்றச் சதி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரது மனைவி சத்யகலாவிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கிய சைக்கிள்கள்: இதனிடையே குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் 2 சைக்கிள்களை போலீசார் கைப்பற்றி புலனாய்வு செய்து வருகின்றனர். இந்த சைக்கிள்களில்தான் வெடிபொருள்கள் வாளிகளில் கட்டப்பட்டு கொண்டு வரப்பட்டதாகவும்,சைக்கிள்கள் அனைத்தும் புதிதாக வாங்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனிடயே இந்த குண்டு வெடிப்புக்குப் பின்னே இந்திய முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்போ அல்லது ஹிந்து தீவிரவாதஅமைப்புகளோ இருப்பதற்கான சாத்தியங்களை மறுப்பதற்கில்லை என புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.