Published:Updated:

போயஸ் கார்டன் வீட்டை மீட்க தீபா அதிரடி பிளான்!

போயஸ் கார்டன் வீட்டை மீட்க தீபா அதிரடி பிளான்!

போயஸ் கார்டன் வீட்டை மீட்க தீபா அதிரடி பிளான்!

போயஸ் கார்டன் வீட்டை மீட்க தீபா அதிரடி பிளான்!

போயஸ் கார்டன் வீட்டை மீட்க தீபா அதிரடி பிளான்!

Published:Updated:
போயஸ் கார்டன் வீட்டை மீட்க தீபா அதிரடி பிளான்!
போயஸ் கார்டன் வீட்டை மீட்க தீபா அதிரடி பிளான்!

போயஸ் கார்டன் வீட்டுக்கு உரிமை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தீபா, வழக்கு தொடர முடிவுசெய்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு, சென்னை போயஸ் கார்டனில் உள்ளது. இந்த வீடு, சசிகலா குடும்பத்தாரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தீபா தரப்பில் புகார் சொல்லப்பட்டது. ''இந்த வீடு எனக்கும் என்னுடைய சகோதரர் தீபக்குக்கும்தான் சொந்தம்'' என்று தீபா ஆரம்பத்திலிருந்தே கூறிவந்தார். ஆனால், அவரால் போயஸ் கார்டன் வீட்டுக்குள் நுழைய முடியவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சில மாதங்களுக்கு முன்பு  தீபக், அழைத்ததால் போயஸ்கார்டன் வீடடுக்குச் சென்றார் தீபா. அப்போது, அவர்கள் இருவருக்குமிடையே நடந்த வாக்குவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பத்திரிகையாளர் உட்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன்பிறகு, போயஸ் கார்டன் வீட்டு விவகாரம் அமைதியானது. தற்போது, போயஸ் கார்டன் வீட்டுக்கு உரிமை கோரி தீபா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவுசெய்துள்ளார். அதற்கான ஏற்பாடுகளைத் தீபா வழக்கறிஞர்கள் செய்துள்ளனர்.

போயஸ் கார்டன் வீட்டை மீட்க தீபா அதிரடி பிளான்!

இதுகுறித்து, தீபா அணியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்ல ராஜாமணி கூறுகையில், "ஜெயலலிதாவின் சொத்துகள் வாரிசு அடிப்படையில் அவரின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோருக்கு கிடைக்க வேண்டும். ஜெயலலிதாவின் சொத்துகள் குறித்த உயில் விவகாரம் இதுவரை வெளியிடப்படவில்லை. தற்போதுவரை, ஜெயலலிதாவின் சொத்துகளின் கட்டுப்பாடு இன்னமும் சசிகலா குடும்பத்தாரிடமே இருக்கின்றன. அவர்களிடமிருந்து சொத்துக்களை மீட்க தீபா, அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். முதற்கட்டமாக போயஸ்கார்டன் வீட்டை நீதிமன்றத்தின் மூலம் பெற முடிவுசெய்துள்ளார். இதற்காக விரைவில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளார்" என்றார்.
 
போயஸ் கார்டன் வீட்டுக்காக தீபா, நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதால் சசிகலா குடும்பத்தினர் கலக்கத்தில் உள்ளனர். தீபாவின் முயற்சிக்கு தீபக் மூலம் தடை ஏற்படுத்தவும் ரகசிய ஆலோசனை நடந்து வருவதாகத் உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism