Published:Updated:

இந்தியாவிலும் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்! பெ.மணியரசன் கோரிக்கை

ரோப்பிய ஒன்றிய தலைமை நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்கி இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்த நிலையில் தமிழீழ ஆதரவாளரும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவருமான பெ.மணியரசனிடம்  இது பற்றிக் கேட்டபோது 

" இது  உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களையெல்லாம் ஆறுதல்படுத்தும், ஜனநாயகத் தீர்ப்பாகும். ஏற்கெனவே 2014-இல் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் இத்தீர்ப்பினை வழங்கியபோதிலும், தமிழினத்துக்கு எதிரான பகை உணர்ச்சியும் பழிவாங்கும் வெறியும் கொண்ட இலங்கை அரசு, அத்தடையை நீக்க வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியத் தலைமை நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

அந்த மேல் முறையீட்டு வழக்கில் இன்று தடை நீக்க ஆணையை உறுதி செய்து, தலைமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அத்தீர்ப்பில் நீதிமன்றம் சொன்ன காரணம், மிகவும் உண்மையான இயல்பான காரணமாகும். 2009-க்குப் பிறகு, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு செயல்படவில்லை. அந்த அமைப்பின் சார்பில் உலகில் எங்கேயும் வன்முறை நடக்கவில்லை. குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் வன்முறை நடக்கவில்லை. எனவே, அந்த அமைப்பின் மீதான தடை தேவையற்றது என்று கூறியுள்ளது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐரோப்பிய ஒன்றிய தலைமை நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை சான்றுகாட்டி, தமிழ்நாடு அரசு இந்திய அரசை உரியவாறு அணுகி விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க முழுமூச்சில் செயல்பட வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism