Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹலோ பாஸ்... நீங்க காதலிக்கிறீங்களா? #FreeAdvice

காதல்...... அடடா இந்த வார்த்தையை கேட்கும்போதே எத்தனை இனிமையா இருக்குல்ல. பள்ளிக்கூடத்தோட முதல் நாளிலிருந்து பன்னிரெண்டாவதோட கடைசிநாள் வரை கோ-எட் பக்கமே எட்டிப்பார்க்காத இளைஞரா இருந்தாலும் சரி, எல்.கே.ஜில இருந்தே எட்டுப்பத்து பொண்ணுங்களோட சுத்திகிட்டு எவன் எவனோட வயித்தெரிச்சலையோ வாங்கிக் கட்டிகிட்டவனா இருந்தாலும் சரி; மீசை முளைக்கும்போதே காதல் ஆசையும் சேர்ந்தே முளைத்து கபாலத்திலிருந்து கால் வரைக்கும் கண்ணாமூச்சி விளையாட்டு காட்டாம போறதில்ல!

சிலருக்கு மல்லிகா டீச்சர், சிலருக்கு எதிர்வீட்டு சல்வார், சிலருக்கு ஜெராக்ஸ் கடை ஜீன்ஸ், சிலருக்குத் திருவிழாவுக்கு வந்த பாவாடை தாவணினு எப்ப வரும், யார்மேல வரும்னு எல்லாம் தெரியாது.. ஆனா வரவேண்டிய நேரம், வரக்கூடாத நேரம் அப்படியெல்லாம் எதையுமே கன்ஸிடர் பண்ணாம வந்து காலி பண்ணிட்டுப் போய்டும்!

காதல்

நம்ம பசங்களும் சும்மா இல்லங்க.. பேனாப் பிடித்து பெயரைக்கூட எழுதியிருக்க மாட்டான்.. ஆனா காதலிக்க ஆரம்பித்தவுடனே கவிதையா கொட்டுவான்! தலையக்கூட சீவாம கல்லூரிக்குப் போய்ட்டு இருந்தவனெல்லாம் அமேசான்ல ஹேர்ஜெல் ஆர்டர் பண்ண  ஆரம்பிச்சுடுவான்! அரியர் மேல அரியர் வெச்சு ஆனந்தமா சுத்திட்டு இருந்தவனெல்லாம் தீடீர்னு டிஸ்டிங்ஷன்ல பாஸாய்டுவான். அப்பா அம்மா அழுதுபார்த்தும் கூட விடாத தம்ம, அவ பார்க்குறானு தெரிஞ்சா விட்டுருவான்! சும்மாவா சொன்னாங்க காதல் ஒரு மந்திரம்தான்..

ஆனால் இந்த மந்திரம் எப்ப செய்வினையா மாறுதுனு யாருக்குமே தெரியாது, உண்மையில் காதல் குறித்த தெளிவான புரிதல் இன்றைய அவசர இளைஞருக்கு இருக்காங்கறது கேள்விக்குறிதான்!  நவீன சினிமாவும் நவ நாகரிக தாக்கங்களும் காதலை ஒரு குறுகிய வட்டத்துக்குள் இந்த இளைய சமுதாயத்துக்குக் காட்சிப்படுத்த தொடங்கிவிட்டது. 

காதலை ஆராய்ந்து அறிந்து கொள்ளும் அளவிற்கு அது ஒன்றும் அறிவியலில்லை. ஆனால் எந்தவிதமான கேள்விகளையுமே கேட்டுக்கொள்ளாமல் அதுகுறித்த முடிவுகளை எடுத்துவிடுகிற அளவுக்கு அதுவொரு சிறுபுள்ளைத் தனமும் இல்லை.

நீங்கள் எந்த பதில் எழுதினாலும் சரியாகப் பொருந்திக்கொள்ளும் வித்தியாசமான கேள்வி காதல், மாறாக எதுவெல்லாம் காதலென்ற பதிலைத் தேடிக்கொண்டிருக்கும் பைத்தியக்காரத்தனம் வேண்டாம் நண்பர்களே.

குளிர்காற்றை வீசிக்கொண்டிருக்கும் அக்கினிக்கடல் காதல், நம் ஆசையெல்லாம் காற்று வாங்குவதோடு நின்றுகொள்ளட்டும் என்ன ஏதென்று தெரியாமல் கால் நனைக்க ஆசைப்பட்டால் வெந்துபோய் விடுகிற விபரீதங்களும் ஏற்படும் ஆச்சர்யபடுவதற்கில்லை. 

ஒரு பெண்ணின் மீது நமக்கிருக்கும் மதிப்பும் அன்பும் நம்முடைய செயல்பாடுகளால் மாத்திரந்தான் வெளிப்படும்.. அதனால் ஒருவேளை வேண்டாம் என்று சொல்லிவிட்டால் கோபம் கொள்ள அவசியமில்லை. 

ஒரு பெண்ணைப் பெண்ணாய் புரிந்துகொள்ளுகிற பக்குவம் நமக்கு இல்லாது போனாலும் தவறில்லை; ஆனால் அவர்கள் தரப்பைப் பற்றிய எந்தவிதமான கவலையுமின்றி நம்மிடமுள்ள நியாயங்களை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்று எதிர்பார்ப்பது ரொம்பவே தவறானது!

பேசுவதும் பழகுவதும் காதலென்று நினைத்துக்கொள்ளுகிற பிற்போக்குத்தனத்தை கொஞ்சம் புறந்தள்ளுங்கள். உங்களுக்கு அவர்கள்மேல் காதலிருப்பதை போல் அவர்களுக்கும் யார்மேலாவது காதலிருக்கலாம் என்ற யதார்த்தத்தை ஒப்புக்கொள்ளுங்கள்.

ஜாதிகளையும் மதங்களையும் ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வுகளையும் சிதறடித்து சிறுமையகற்றும் பெரிய குணம் காதலுக்கு மாத்திரம்தான் உண்டு. முடிந்தவரை அதை முதிர்ச்சிபெற்று அணுகுங்கள். நம்மீது அவருக்கும் அவர்மீது நமக்கும் இருக்கிற மதிப்பும் மரியாதையும் நம்முடைய காதல் கைக்கூடாது போனாலும் தொடருகிற மாதிரி ஓர் ஆரோக்கியமான அப்ரோச்களை கையிலெடுங்கள். 
வெறுமனே தாடியும், போதையும்,  ‘இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் ’என்ற ஏக வசனங்களும் நம்மை ஒருநாளும் ஏற்றிக் காட்டப்போவது இல்லை.

 நுரைக்க நுரைக்க காதல் செய்யுங்கள்; காதலை சுகியுங்கள்; கவிதை எழுதுங்கள். ஆனால் அதே சமயம் காதல் இருவருக்கும் பொதுவானதாக இருக்கட்டும்.                         

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close