Published:Updated:

மனைவியைக் கொன்று முந்திரிக்காட்டில் புதைத்த கணவன்! சிக்கியது எப்படி?

மனைவியைக் கொன்று முந்திரிக்காட்டில் புதைத்த கணவன்!  சிக்கியது எப்படி?
மனைவியைக் கொன்று முந்திரிக்காட்டில் புதைத்த கணவன்! சிக்கியது எப்படி?

மனைவியைக் கொன்று முந்திரிக்காட்டில் புதைத்த கணவன்! சிக்கியது எப்படி?


                     

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர், கனகவள்ளி. இவர் திருமணமாகி விவாகரத்தானவர். இவருக்கும் உடையார்பளையத்தைச் சேர்ந்த அருண் என்பவருக்கும் 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 வயதில் பரணி என்ற ஆண் குழந்தை உள்ளது. இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இந்நிலையில், 11 மாதங்களுக்கு முன்பு கனகவள்ளி தனது குழந்தையுடன் சென்னை தாம்பரம் அருகே சீனிவாசபுரத்தில் ஒரு கடையில் வேலைபார்த்து வந்துள்ளார்.

கனகவள்ளியைத் தனது சொந்த காரில் அருண், அருணின் சகோதரர், தந்தை தங்கராசு ஆகியோர் சென்று அழைத்து வந்துள்ளனர். அதன்பிறகு, கனகவள்ளியைக் காணவில்லை என்று சென்னை சேலையூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் சேலையூர் போலீஸார் விசாரணைசெய்து வந்தனர். அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில்,


 கனகவள்ளியின் தம்பி மணிவண்ணன், 'எனது சகோதரியைக் காணவில்லை' என சென்னை நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்குத் தொடர்ந்தார். சென்னை சேலையூர் போலீஸார், அருண் மற்றும் அவரது தந்தை தங்கமணி மற்றும் கார் ஓட்டிவந்த டிரைவர் மணிகண்டன் ஆகியோரை அழைத்து விசாரித்ததில், கனகவள்ளியைக் கொலைசெய்து புதைத்துவிட்டதாகக் கூறினர். இந்தத் தகவலின் பேரில் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள குவாகம் பகுதிகளில் அருண் காட்டிய இடங்களில் குழிதோண்டிப் பார்த்துள்ளார்கள். ஆனால், உடல் கிடைக்கவில்லை. சரியான இடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் இரண்டு நாள்களாக  காவல்துறை திணறியது. மீண்டும் அருணை விசாரித்ததில், கொங்கனர் முந்திரிக்காட்டில் புதைத்ததாக ஒப்புக்கொண்டார்.


கொங்கனர் முந்திரிக்காட்டில் தோண்டிப் பார்க்கும்போது, அதில் மண்டை ஓடு,  உடல் உறுப்புகளின் எலும்புகள், பெண்ணின் தலைமுடி, சேலை துணிகள், தாலி உள்ளிட்டவை கிடைத்துள்ளன. கிடைத்த உறுப்புகளைச் சேகரித்துக்கொண்டு டி.என்.ஏ டெஸ்ட்டுக்கு அனுப்பியுள்ளனர். இந்தச் சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு