Published:Updated:

புதுச்சேரி மருத்துவச் சேர்க்கை விவகாரம் - 95 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்தது எம்.சி.ஐ

புதுச்சேரி மருத்துவச் சேர்க்கை விவகாரம் - 95 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்தது எம்.சி.ஐ
புதுச்சேரி மருத்துவச் சேர்க்கை விவகாரம் - 95 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்தது எம்.சி.ஐ

புதுச்சேரியில் 7 தனியார் கல்லூரிகளில் முறைகேடாகச் சேர்ந்த 95 மாணவர்களின் அனுமதியை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது இந்திய மருத்துவ கவுன்சில். மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் கடுமையான மோதல் நிலவி வந்தது. தற்போது எம்.சி.ஐ-யின் இந்த உத்தரவின் மூலம் புதுச்சேரி அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று தனது டிவிட்டர் பக்கத்தில், ”புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முறைகேடாகச் சேர்ந்த 95 மாணவர்களின் அனுமதியை இந்திய மருத்துவக் கவுன்சில் ரத்து செய்து கடுமையான நடவடிக்கையை எடுத்திருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டை ஆட்சியாளர் மறுத்து வந்த நிலையில், இந்த வழக்கில் இது முக்கியமான திருப்புமுனை. இந்த 95 மாணவர்களும் சென்டாக் மூலம் தேர்வாகாமல் 7 தனியார் கல்லூரிகளிலும் அதிக நன்கொடை கொடுத்து முறைகேடாகச் சேர்ந்தவர்கள். இது ஒரு மிகப்பெரிய முறைகேடு. இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ விசாரித்து வருகின்றது. அதேபோல சென்னை உயர் நீதிமன்றதிலும் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த 95 மாணவர்களின் அனுமதியை ரத்து செய்த உத்தரவை இந்திய மருத்துவக் கவுன்சில் இன்று எனக்கு அனுப்பியிருக்கிறது. அதேபோல சம்பந்தப்பட்ட கல்லுரிகளுக்கும் அனுப்பியிருக்கிறது. இதன் மூலம் முறைகேடாக மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த 95 மாணவர்களின் அனுமதியும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது” என்று பதிவு செய்திருக்கிறார்.