Published:Updated:

மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு: காரணம் இதுதான்!

மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு: காரணம் இதுதான்!
மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு: காரணம் இதுதான்!

மெரினா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து, கடந்த ஜனவரி மாதம் தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக, சென்னை மெரினாவில் லட்சக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என்று குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது.


ஆனால், அந்தப் போராட்டத்துக்குப் பிறகு தமிழகத்தில் மீண்டும் ஒரு எழுச்சிப் போராட்டம் நடைபெறக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மெரினாவில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. அங்கு போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது. போராட அனுமதி கேட்பவர்களுக்கு அனுமதி மறுப்பது, மீறி போராடுபவர்களைக் கைது செய்வது என்று மெரினா கடற்கரையே காவலர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.


இந்நிலையில், சென்னை மெரினாவில், இன்று காலை முதலே அதிக அளவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் இன்று இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. 


இதையடுத்துதான், மெரினாவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, அண்ணா சதுக்கம் முதல் விவேகானந்தர் மண்டபம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. அதேபோல, போலீஸ் உயர் அதிகாரிகளும் ரோந்து வந்தவண்ணம் இருக்கின்றனர்.