Published:Updated:

குறைந்தவிலையில் 4ஜி ஸ்மார்ட்போன்: ஜியோவுக்குப் போட்டியாகக் களமிறங்கும் ஐடியா!

குறைந்தவிலையில் 4ஜி ஸ்மார்ட்போன்: ஜியோவுக்குப் போட்டியாகக் களமிறங்கும் ஐடியா!
குறைந்தவிலையில் 4ஜி ஸ்மார்ட்போன்: ஜியோவுக்குப் போட்டியாகக் களமிறங்கும் ஐடியா!

மலிவு விலை ஸ்மார்ட்போன் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதிரவைத்த ஜியோ-க்குப் போட்டியாகத் தற்போது ஐடியா நிறுவனமும் மலிவு விலையில் ஸ்மார்ட்போன் விற்பனையில் களமிறங்கியுள்ளது.

இலவசச் சலுகைகளால் இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில், அதிரடி மாற்றத்தையே ஏற்படுத்தியிருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். இலவச 4G டேட்டா மற்றும் இலவச கால்கள் மூலம், 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைச் சில மாதங்களிலேயே அந்நிறுவனம் பெற்றது. இதைத் தொடர்ந்து மலிவு விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்கள் விரைவில் விற்பனைச் சந்தைக்கு வருமென ஜியோ சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில் ஜியோவுக்குப் போட்டியாக ஐடியா மொபைல் நிறுவனமும் மலிவு விலையில் ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யவுள்ளது. இதுகுறித்து ஐடியா நிறுவனத் தலைவர் கபானியா கூறுகையில், ‘4ஜி ஸ்மார்ட் போன்களை ரூ.2,500-க்கு ஐடியா நிறுவனம் தரவுள்ளது. தற்போதைய ட்ரெண்ட் அறிந்து இந்த மலிவு விலை புதிய போன் ‘டூயல் சிம்’ வசதியுடன் வழங்கப்படும். இது 4ஜி போனாக இருந்தாலும் 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க் வசதிகளையும் பயன்படுத்த முடியும். மேலும், பல புதிய தொழில்நுட்ப அம்சங்களை சந்தை ஆய்வுகளுக்குப் பின்னர் ஆராய்ந்து வழங்க முடிவு செய்துள்ளோம்’ என்றார்.