Published:Updated:

பாதுகாப்பு கேட்கும் காதல் தம்பதியினர்..!    

செ.சல்மான் பாரிஸ்
பாதுகாப்பு கேட்கும் காதல் தம்பதியினர்..!    
பாதுகாப்பு கேட்கும் காதல் தம்பதியினர்..!    

சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட விருதுநகரைச் சேர்ந்த பொன் ப்ரியா, தனக்கும் தன் கணவர் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு அளிக்கும்படி, தமிழக முதல்வருக்கு கடிதம் அளித்துள்ளார்.

விருதுநகரைச் சேர்ந்த பொன் பிரியா என்பவர், தன் பள்ளித் தோழனை காதலித்துத் திருமணம்செய்துள்ளார். ஜாதியைக் காரணம்காட்டி பொன் பிரியா வீட்டார் அவரது கணவர் பாண்டியராஜனின் வீட்டை அடித்துத் தாக்கியுள்ளனர். இந்நிலையில், கிருஷ்ணப்பேரியிலுள்ள பாண்டியராஜனின் உறவினர் வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டதையடுத்து, பொன் பிரியா  பாதுகாப்புக் கேட்டு அதிகாரிகளிடம்  புகார் அனுப்பியுள்ளார். ஆனால், அந்தப் புகார்களின் மீது எந்த நடவடிக்கையும் இல்லாததால், தற்போது  முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார். அதில், ’மகளென்றும் பாராமல் தன் தந்தை பல நாள்களாக செய்த பாலியல் ரீதியிலான கொடுமைகளையும்'   பொன் பிரியா  குறிப்பிட்டுள்ளார்.

நம்மிடம் பேசிய சோஷியல் ஜஸ்டிஸ் ஆறுமுகம், ''பொன் ப்ரியா, பிற்பட்ட சாதியைச் சேர்ந்தவர்,  பள்ளியில் ஒன்றாகப் பயின்ற பட்டியல் வகுப்பைச் சேர்ந்த பாண்டியராஜனை நீண்டகாலமாக காதலித்து, சமீபத்தில் பதிவுத்திருமணம் செய்துகொண்டார். இந்தத் தகவல் தெரிந்து, பொன் ப்ரியாவின் பெற்றோர் மற்றும் ஊர்க்காரர்கள், இவர்களைக் கொல்வதற்கு முயற்சிசெய்துள்ளனர். அங்கிருந்து தப்பி வந்துள்ளனர். விருதுதுநகர் மாவட்ட காவல்துறை எடுக்கும் நடவடிக்கை மூலம்தான் பொன் ப்ரியா-பாண்டியராஜன் நிம்மதியாக வாழமுடியும்'' என்றார்.