Published:Updated:

300 சதவிகிதம் அதிகரித்த அமித் ஷாவின் சொத்து மதிப்பு!

300 சதவிகிதம் அதிகரித்த அமித் ஷாவின் சொத்து மதிப்பு!
300 சதவிகிதம் அதிகரித்த அமித் ஷாவின் சொத்து மதிப்பு!

பாதுகாப்புத்துறை மந்திரியாக அமித்ஷா பொறுப்பேற்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்ய அவர் மனுத்தாக்கல் செய்தார்.மனுத்தாக்கலில் அமித் ஷாவின் சொத்து மதிப்பு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. 

2012ம் ஆண்டு அமித் ஷாவின் அசையக் கூடிய சொத்து மதிப்பு ரூ. 1.90 கோடியாக இருந்தது. 2017ம் ஆண்டு ரூ. 19 கோடியாக உயர்ந்துள்ளது. அமித் ஷா மற்றும் அவர் மனைவியின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 300 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2012ம் ஆண்டு அமித் ஷாவின் மனைவியின் சொத்து மதிப்பு ரூ. 8.54 கோடியாக இருந்தது. தற்போது ரூ. 34.31 கோடியாக அதிகாரித்திருக்கிறது. அமித் ஷாவின் பரம்பரை அசையும் சொத்து மதிப்பு ரூ.10.38 கோடியாக இருக்கிறது. 

ராஜ்யசபா எம்.பி பதவிக்கு போட்டியிடும் ஸ்ம்ரிதி இரானி மற்றும் கணவரின் சொத்து மதிப்பும் இரு மடங்காக அதிகரித்துள்ளது. 2014ம் ஆண்டு ரூ. 4.91 கோடியாக , இருந்த ஸ்ம்ருதியின்  சொத்து மதிப்பு ரூ. 8.88 கோடியாக அதிகாரித்திருக்கிறது. 2014ம் ஆண்டு, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட ஸ்ம்ரிதி இரானி, 1994ம் ஆண்டு டெல்லி பல்கலையில் அஞ்சல் வழியாக பி.காம் பட்டம் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். இந்த மனுத்தாக்கலில் டிகிரி முடிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். 

ஸ்மிரிதி இரானி பட்டம் பெற்றரா இல்லையா என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் பதில் அளிக்குமாறு கேட்டப்படுவதால் சர்ச்சையை தவிர்க்கவே இந்த முறை டிகிரி முடிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது 1996ம் ஆண்டு அஞ்சல்வழியில் பி.ஏ. படித்தாகவும் ஸ்ம்ரிதி இரானி குறிப்பிட்டிருந்தார்.