Published:Updated:

"செட்டியார் பாரம்பரியம்" புத்தக வெளியீட்டு விழா

"செட்டியார் பாரம்பரியம்" புத்தக வெளியீட்டு விழா
"செட்டியார் பாரம்பரியம்" புத்தக வெளியீட்டு விழா
"செட்டியார் பாரம்பரியம்" புத்தக வெளியீட்டு விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செட்டியார் பாரம்பரிய அறக்கட்டளை சார்பில் "செட்டியார் பாரம்பரியம் " என்கிற நூல் வெளியிட்டு விழா க.ராம தெரு, மெ.செ இல்லமான, பழமையான பங்களா வீட்டில் நடைபெற்றது.கர்நாடக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் எஸ்.எஸ். மீனாட்சி சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். முதல் பிரதியை நூறு வயதான பழனியப்ப செட்டியார் ,சம்பந்தம் செட்டியார் ஆகிய இருவரும் பெற்றுக்கொண்டார்கள்.

முதல் பிரதியை பெற்றுக்கொண்டவரும்,நூறு வயதைக் கடந்தவருமான பழனியப்ப செட்டியார் பேசும் போது, " நகரத்தார்கள் உலகம் முழுவதும் பரந்து இருக்கிறோம். நம் ஜனத்தொகை ஒரு லட்சத்தை எட்டியிருக்கிறது. நம்முடைய கலாச்சாரம்,வாழ்க்கை முறை ஒன்பது கோயிகளை உள்ளடக்கி இருப்பது என்பது  இளைய தலைமுறையினருக்கு தெரியவில்லை. தொழில் நிறுவனம் மற்றும் தொழில்களில் வளர்ந்து இருந்தோம். தானம், தர்மம் ,கோயில் பராமரிப்பு என செய்து வந்தோம்.தற்போது தொழில்துறையில் குறைந்து வருகிறோம். மலேசியா,சிங்கப்பூர்,அமெரிக்கா ,ஆஸ்திரேலியா, ஜெர்மன் என அயல்நாடுகளில் நம் இளைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு நம்முடைய பாரம்பரியம் தெரியவில்லை.இந்த புத்தகம் நம் பாரம்பரியம் காக்கும் பொக்கிசமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை" என்றார்.

"செட்டியார் பாரம்பரியம்" புத்தக வெளியீட்டு விழா

காரைக்குடி என்றாலே அது நாட்டுக்கோட்டை செட்டியார், நகரத்தார்னு தான் நமக்ககெல்லாம் ஞாபகம் வரும்.அதுக்கு காரணம் அவர்களின் கட்டிடக்கலை, உணவு பாரம்பரியம் ஆகியவை தான் முக்கியமாக இடம்பிடித்திருக்கும்.அந்த வகையில் செட்டியார் பாரம்பரியம் என்கிற நூல் மிக முக்கியமான ஆவணமாக பதிவு செய்திருக்கிறார்கள்.