Published:Updated:

முந்த்ரா... இந்தியாவின் முதல் ரிமோட் கன்ட்ரோல் டாங்க் ஆவடியில் தயார்!

எம்.குமரேசன்
முந்த்ரா... இந்தியாவின் முதல் ரிமோட் கன்ட்ரோல் டாங்க் ஆவடியில் தயார்!
முந்த்ரா... இந்தியாவின் முதல் ரிமோட் கன்ட்ரோல் டாங்க் ஆவடியில் தயார்!

முந்த்ரா என பெயரிடப்பட்டுள்ள இந்தியாவின் முதல் ஆளில்லாத டாங்க் ஆவடியில் தயாரிக்கப்பட்டுள்ளது. ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ( DRDO)சார்பில் இந்த ரக டாங்குகள் சென்னை ஆவடியில் உள்ள  தாக்குதல் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு உற்பத்தி நிலையத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. மூன்று வகையில் இந்த டாங்க்குகள் தயாரிக்கப்படுகின்றன.

முந்த்ரா-எஸ் என்பது தரைப்பகுதியில் தாக்குதல் மற்றும் கண்காணிப்பில் ஈடுபடும் வகையாகும். முந்த்ரா- எம், கண்ணிவெடிகளை கண்டுபிடித்து அகற்றும் திறன் படைத்தது. முந்த்ரா- என் அணு மற்றும் ரசாயன கதிர்வீச்சுகளுக்கிடையே பணியாற்றும் ஆற்றல் பெற்றது. இந்த டாங்குகளில் ரேடார் வசதியுடன் அதிநவீன கேமரா மற்றும் லேசர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. சுமார் 15 கி.மீ தொலைவில் யார் இருந்தாலும் கண்டுபிடித்து துல்லியமாகத் தாக்கும் திறன் படைத்தது. 

ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் உள்ள மகாஜன் சோதனை மையத்தில் ரிமோட் கன்ட்ரோல் மூலம்  இந்த டாங்குகளை இயக்கி வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டன. தற்போது, ஆவடியில் மக்கள் பார்வைக்கு இந்த டாங்குகள் வைக்கப்பட்டுள்ளன. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கு இந்த முந்த்ரா டாங்க் அர்ப்பணிக்கப்படுகிறது.