Published:Updated:

பரோலில் பேரறிவாளன் விடுவிப்பு எப்போது? அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பரோலில் பேரறிவாளன் விடுவிப்பு எப்போது? அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்
பரோலில் பேரறிவாளன் விடுவிப்பு எப்போது? அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்

பரோலில் பேரறிவாளன் விடுவிப்பு எப்போது? அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனை பரோலில் விடுவிப்பதுகுறித்த கேள்விக்கு, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் அளித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பேரறிவாளன். 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையிலிருக்கும் பேரறிவாளனை விடுதலை செய்யக்கோரி, அவரது தாயார் அற்புதம்மாள் சட்டப் போராட்டம் மேற்கொண்டுவருகிறார். இந்த நிலையில், தந்தை குயில்தாசன் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், தன்னை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் மனுக்கொடுத்தார். இந்த மனு இன்றுவரை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பேரறிவாளனை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்குப் பதில் அளித்த முதல்வர் பழனிசாமி, பேரறிவாளனை பரோலில் விடுவிப்பதுகுறித்து அரசு பரிசீலனைசெய்துவருவதாகத் தெரிவித்தார்.

இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், பேரறிவாளனை பரோலில் விடுவிக்க சட்டத்தில் இடம் உள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன. அவரை பரோலில் விடுவிப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளிவரும். நளினியை பரோலில் விடுவிப்பதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது" என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு