Published:Updated:

`கபாலி' 345-ம் நாள் விழா!

`கபாலி'  345-ம் நாள் விழா!
`கபாலி' 345-ம் நாள் விழா!

`பாட்ஷா'  `கபாலி' பட வரிசையில் அடுத்த கேங்ஸ்டர் படத்தை பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். இவர் இயக்கிய `கபாலி', ஒரு  வருடகாலமாக திரையில் ஓடி, சாதனை புரிந்திருக்கிறது. இந்த வெற்றியை விமரிசையாகக் கொண்டாட சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் `மகிழ்ச்சி விழா'-வை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

`கபாலி'  345-ம் நாள் விழா!


 

சென்னை, கோவை,பெங்களூரு எனப் பல நகரங்களிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களால் மகிழ்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. எல்லோரும் மதுரை மணி இம்பாலா திரையரங்கம் முன்பு கூடி அணிவகுப்பு நடத்தி, செண்டை மேளம் முழங்க, சூப்பர் ஸ்டாரின் பாடல்களை ஒளிபரப்பி, ஆட்டம் பாட்டத்துடன் விழாவை நடத்தினர். ரசிகர்களின் விசில் சத்தமும் விழாவுக்காக வெடிக்கப்பட்ட பட்டாசு சத்தமும் சூப்பர் ஸ்டாரின் `நெருப்புடா...' பாடலுமாகச் சேர்ந்து அரங்கமே அதிர்ந்தது.

விழாவின் ஒரு பகுதியாக, மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலர் உரையாற்றினார்கள். ’தமிழகத்தில் பொற்கால ஆட்சி அமைய இருக்கிறது. ரசிகர்கள் அமைதி காக்கவும்’ என்றார் நிர்வாகிகளில் ஒருவர். இதன்மூலம் ரசிகர்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்றும் சூப்பர் ஸ்டார் தனிக்கட்சி ஆரம்பிப்பதையே ரசிகர்கள் விரும்புகின்றனர் என்றும் புரிகிறது.

`கபாலி' படத்தில் ரஜினியின் நிழலாக வலம்வந்த நடிகர் ஜான்விஜய், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். ’அண்ணே, உங்களை ஒரே ஒரு தடவை கட்டிப்பிடிச்சிக்கட்டுமா?’ என்ற வசனத்தை அவர் கூற, ரசிகர்கள் அத்தனை பேரும் தங்களை மறந்து ஒரே குரலில் கத்தினார்கள்.

விழாவில், ரஜினிகுறித்த பல வாழ்த்தொலிகள் தொடர்ந்து ஒலித்தன. `கபாலி' பட விழாவுக்காக கேக் வெட்டப்பட்டது. 345-ம் நாள் நினைவாக, பெண்களுக்கு 344 குடங்களும்  ஒரு தையல் இயந்திரமும் வழங்கப்பட்டன. இப்படியாக, `கபாலி' படக் கொண்டாட்டங்கள், `நெருப்புடா...' பாடலுடன் ரசிகர்களின் ஆர்வம் குறையாமல் நிறைவுபெற்றன.