ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோரில் அதிகமாக டவுன்லோடு செய்யப்பட்ட அப்ளிகேஷன் இதுதான்!

கூகுள் நிறுவனத்துக்குச் சொந்தமான ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சமீபத்தில் நடந்துமுடிந்த கூகுள் I/O நிகழ்ச்சியில் பேசிய அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, 200 கோடிக்கும் மேற்பட்டோர் ஆண்ட்ராய்டைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்திருந்தார்.

ஆண்ட்ராய்டு - கூகுள் ப்ளே சர்வீசஸ்

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துபவர்கள், தங்களுக்குத் தேவையான அப்ளிகேஷன்களை கூகுள் ப்ளே ஸ்டோர் மூலமாகத் தரவிறக்கம் செய்வர். இதில் முதல்முதலாக ஓர் அப்ளிகேஷன் 500 கோடி டவுன்லோடுகளைக் கடந்துள்ளது. ஆண்ட்ராய்டு டிவைஸ்களில் ப்ரி-இன்ஸ்டால்ட் அப்ளிகேஷனாக வரும் கூகுள் ப்ளே சர்வீசஸ் அப்ளிகேஷன்தான் அது. கூகுள் நிறுவனத்தின் சேவைகளான ப்ளே ஸ்டோர், ப்ளே மியூசிக், மேப்ஸ் போன்றவற்றை இயக்கும் வேலையை இந்த அப்ளிகேஷன் செய்கிறது.

கூகுள் அக்கவுன்ட்டைப் பயன்படுத்தி டிவைஸில் லாகின் செய்யும் வேலையையும் இந்த ஆப்தான் செய்கிறது. ஆண்ட்ராய்டில் இது கட்டாயமாக நிறுவப்படும் அப்ளிகேஷன் என்பதால், இதுவரை 500 கோடிக்கும் அதிகமான ஆண்ட்ராய்டு டிவைஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!