

சென்னை: மத்திய அமைச்சர் விலாஸ் ராவ் தேஷ்முக்கின் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், செயற்கை சுவாச கருவிகளுடன் அவர் உயிருக்கு போராடி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விலாஸ்ராவ் தேஷ்முக் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டார்.இதற்காக அவர் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.கல்லீரல் செயல்படாததால் அவருடைய நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வந்தது. தற்போது அவருடைய சிறுநீரகம் இரண்டும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.கல்லீரலும் செயல்படவில்லை.
##~~## |
விலாஸ் ராவ் தேஷ்முக்கின் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், செயற்கை சுவாச கருவிகளுடன் அவர் உயிருக்கு போராடி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து அவர் நேற்று சென்னை கொண்டு வரப்பட்டு பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவருக்கு கல்லீரலை தானமாக கொடுக்க அவரது மகனும்,நடிகருமான ரித்திஷ் தேஷ்முக் முன் வந்துள்ளார்.அவருடைய திசுக்கள் பரிசோதிக்கப்பட்டு, மருத்துவ நிபுணர்களின் ஒப்புதல் பெற்றபிறகு விலாஸ்ராவ் தேஷ்முக்குக்கு அவரது மகனின் கல்லீரல் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தேஷ்முக், செயற்கை சுவாச கருவிகளுடன் உயிருக்கு போராடி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.