Published:Updated:

இரு அணிகள் இணைப்பு என்றே பேச்சுக்கே இடமில்லை..! மைத்ரேயன் உறுதி

கார்த்திக் துரைமகாராஜன்.சி
இரு அணிகள் இணைப்பு என்றே பேச்சுக்கே இடமில்லை..! மைத்ரேயன் உறுதி
இரு அணிகள் இணைப்பு என்றே பேச்சுக்கே இடமில்லை..! மைத்ரேயன் உறுதி

இரு அணிகள் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

இரு அணிகள் இணைப்பு என்றே பேச்சுக்கே இடமில்லை..! மைத்ரேயன் உறுதி


இரு அணிகள் இணைப்பு குறித்த பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. இரு அணிகள் இணைப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதனால் இரு அணிகளும் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பேசப்பட்டன. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மைத்ரேயன் பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், 'கடந்த சில நாட்களாக இணைப்பு பற்றி வதந்திகள் இறக்கை கட்டிப் பறக்கின்றன.

நான் இதில் மிகத்தெளிவாக உள்ளேன். அண்ணன் ஓபிஎஸ் தலைமையில் சேர வரும் அனைவரையும் வரவேற்கிறேன். சேருவது வேறு. இணைப்பு வேறு. இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. மற்றொரு விஷயத்தையும் தெளிவுபடுத்த வேண்டும். எடப்பாடி தலைமையிலான அரசு ஒரு ஊழல் அரசு. அது அம்மா அவர்கள் உருவாக்கிய அரசு அல்ல. எனவே எடப்பாடி தலைமையிலான ஊழல் அரசுக்கு துணை போவது தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி. அம்மாவின் ஆன்மாவாக விளங்கும் அண்ணன் ஓ.பி.எஸ் தலைமையில் அம்மாவின் நல்லாட்சி அமைப்பதே நமது லட்சியம்' என்று பதிவிட்டுள்ளார்.