Published:Updated:

என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்பு..! 22 நாள் போராட்டம் முடிவுக்குவந்தது..!

க.பூபாலன்
எஸ்.தேவராஜன்
என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்பு..! 22 நாள் போராட்டம் முடிவுக்குவந்தது..!
என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்பு..! 22 நாள் போராட்டம் முடிவுக்குவந்தது..!

என்.எல்.சி நிறுவனம் ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கையை நிர்வாகம் ஏற்றுக்கொண்டதையடுத்து, 22 நாள்கள் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.


கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில், கடந்த 20 ஆண்டுகளாக 10,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரத் தன்மைகொண்ட பணியைச் செய்துவருகிறார்கள். அவர்களின் 26 நாள்கள் வேலை என்பதை, 19 நாள்களாக நிர்வாகம் குறைத்தது. இதைக் கண்டித்து, கடந்த மாதம் 12-ம் தேதியிலிருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர் ஒப்பந்தத் தொழிலாளர்கள்.


போராட்டம், காவல்துறை தடியடி, பேச்சுவார்த்தை என நீண்டுகொண்டே போன இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாணும் வகையில், தொழிலாளர்களின் சார்பாக பா.ம.க, கம்யூனிஸ்ட், த.வா.க, வி.சி.க, தி.மு.க போன்ற தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்து, இன்று பேச்சுவார்த்தை நடத்தினார் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜேஷ். அப்போது, தொழிலாளர்களின் கோரிக்கையைப் பரிசீலித்த மாவட்ட ஆட்சித்தலைவர், 'பழையபடி நீங்கள் செய்து வந்த மாதத்துக்கு 26 நாள்கள் வேலை என்பதைத் தொடர்ந்து செய்யலாம். அதில் ஏதும் தடையில்லை. எனவே, நீங்கள் செய்துவந்த போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குச் செல்லுங்கள்" என்றார். அதை ஏற்றுக்கொண்டு, இரவே தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினார்கள். இந்த வெற்றியை இனிப்பு வழங்கி, வெடிவெடித்துக் கொண்டாடினார்கள் தொழிலாளர்கள்.