Published:Updated:

ஈரான் அதிபருடன் நிதின் கட்கரி சந்திப்பு: சபாஹர் துறைமுகம் விரைவில் செயல்பட நடவடிக்கை!

வெங்கட சேது.சி
ஈரான் அதிபருடன் நிதின் கட்கரி சந்திப்பு: சபாஹர் துறைமுகம் விரைவில் செயல்பட நடவடிக்கை!
ஈரான் அதிபருடன் நிதின் கட்கரி சந்திப்பு: சபாஹர் துறைமுகம் விரைவில் செயல்பட நடவடிக்கை!

சபாஹர் துறைமுகத் திட்டத்தை விரைந்து முடித்து, செயல்பாட்டுக்குக் கொண்டுவருவது என இந்தியாவும் ஈரானும் முடிவு செய்துள்ளன.
சபாஹர் துறைமுகம் செயல்படத்தொடங்கினால், பிராந்திய அளவிலான வர்த்தகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகை ஏற்படுவதுடன், சர்வதேச சந்தைகளுக்கு ஆப்கானிஸ்தானின் நில அடிப்படையிலான வழிக்கு மாற்றுப்பாதையாகவும் விளங்கும் என்று தெரிகிறது.

இரண்டு நாள் பயணமாக ஈரான் தலைநகர் டெஹ்ரான் சென்ற மத்திய கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி, அந்நாட்டு அதிபர் ஹாசன் ரவுஹானி மற்றும் துணை அதிபர் ஈசாக் ஜஹாங்கிரி ஆகியோரைச் சந்தித்துப் பேசியபோது, இந்தத் துறைமுகம் தொடர்பாகப் பேச்சு நடத்தினார். மேலும், ஈரான் நாட்டின் சாலை மற்றம் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் அப்பாஸையும் நிதின் கட்கரி சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினார்.

கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் சென்றிருந்தபோது, சபாஹர் துறைமுக மேம்பாடு தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளின்படி நிறைவேற்றப்பட்டுவரும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் அமைச்சர் கேட்டறிந்தார்.

ஈரான் அதிபராக இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றுள்ள ரவுஹானிக்கு வாழ்த்து தெரிவித்தும், இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தும் பிரதமர் மோடி அனுப்பியுள்ள கடிதத்தையும் அமைச்சர் அவரிடம் வழங்கினார்.