Published:Updated:

’எந்தக் கட்சியையும் சேராதவன் நான்..!’: திருப்பதியில் வெங்கைய நாயுடு!

ராகினி ஆத்ம வெண்டி மு.
’எந்தக் கட்சியையும் சேராதவன் நான்..!’: திருப்பதியில் வெங்கைய நாயுடு!
’எந்தக் கட்சியையும் சேராதவன் நான்..!’: திருப்பதியில் வெங்கைய நாயுடு!

துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு இன்று காலை திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

புதிய குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வெங்கைய நாயுடு இன்று காலை பெங்களூருவிலிருந்து தனி விமானம் மூலம் ஆந்திரம் மாநிலம் ரேணிகுண்டா சென்று அங்கிருந்து திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றார். சித்தூர் மாவட்ட ஆட்சியர் பிரத்யும்னா, தேவஸ்தான அதிகாரி அணில்குமார் மற்றும் பா.ஜ.க-வின் முக்கியப் பிரமுகர்களும், அரசியல் தலைவர்களும் வெங்கைய நாயுடுவை வரவேற்று அவரது பயணத்தை ஒருங்கிணைத்தனர். 

திருமலையில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த வெங்கைய நாயுடு கூறுகையில், ‘அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படும் குடியரசுத் துணைத் தலைவர் ஆகிய நான் தற்போது எந்தக் கட்சியையும் சேராதவன். எனது பொறுப்பை உணர்ந்து தன்னிச்சையாகச் செயல்பட்டு முடிவுகள் எடுப்பேன். அமைச்சரவையில் இருந்து விலகியுள்ள நான், மத்திய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விரைவில் விலகிவிடுவேன். குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான பொறுப்புகளை உணர்ந்து அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு கடமையாற்றுவேன்’ என்றார்.