Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

20 ஆண்டுகளுக்கு மேலாக மோடிக்கு ராக்கி கட்டும் பாகிஸ்தான் சகோதரி

 இந்தியாவில் வசித்து வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி வருகிறார். 

பாகிஸ்தானைச் சேர்ந்த உமர் மொஷின் ஷாயிக் என்பவர், தனது  திருமணத்துக்குப் பின்னர் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தார். டெல்லியில் வசித்து வரும் ஷாயிக் கூறுகையில், ’கடந்த 22 முதல் 23 ஆண்டுகளாக பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி வருகிறேன். இந்த முறை அவருக்கு ராக்கி கட்டும் தருணத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன். மோடிக்கு முதன்முதலில் ராக்கி கட்டியபோது அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பணிபுரிந்து வந்தார். கடின உழைப்பால் நாட்டின் பிரதமராக அவர்  உயர்ந்துள்ளார். பிரதமர் மோடிக்கு வேலைப்பளு அதிகம் இருக்கும் என்பதால், இந்த முறை ராக்கி கட்டமுடியாது என்று எண்ணியிருந்தேன். ஆனால், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் பிரதமர் மோடி தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொன்னார். அவரது அழைப்பு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. இதையடுத்து ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டத்துக்குத் தயாராகிவிட்டேன்’ என்றார். 

- தினேஷ் ராமையா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement