Published:Updated:

யூ பி யோதாவுக்கு படுதோல்வியைப் பரிசாகத் தந்த பெங்கால் வாரியர்ஸ் #ProKabaddi 

பு.விவேக் ஆனந்த்
யூ பி யோதாவுக்கு படுதோல்வியைப் பரிசாகத் தந்த பெங்கால் வாரியர்ஸ் #ProKabaddi 
யூ பி யோதாவுக்கு படுதோல்வியைப் பரிசாகத் தந்த பெங்கால் வாரியர்ஸ் #ProKabaddi 

புரோ கபடி ஐந்தாவது சீசனின் 16-வது ஆட்டம், நேற்று இரவு எட்டு மணிக்கு நடந்தது.  பி பிரிவில் உள்ள  பெங்கால் வாரியர்ஸ்  அணியும்  யூ பி யோதா அணியும்  நாக்பூர் மைதானத்தில் ஆக்ரோஷமாகக்  களம் இறங்கின. பெங்கால் அணி முதல் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வென்ற தெம்புடன் களம் கண்டது. யூ பி யோதா, இதுவரை எந்தப் போட்டியிலும் தோற்காததால், கெத்தாக மைதானத்தில் நுழைந்தது. 

இரண்டு அணிகளுமே டிஃபன்சில் பலம்  வாய்ந்தவர்கள். ஆனால், ஆட்டத்தின் முதல் பாதியின்  8-வது நிமிடத்திலேயே  பெங்கால் வாரியர்ஸ் ஆல் அவுட் செய்தனர். இந்த சீசனில், வலுவான அணியாகக் காணப்பட்ட யூ பி யோதா அணியினர், 9 புள்ளிகள் பின்தங்கி இருந்தார்கள். இதுவே,  புரோ கபடி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  பெங்கால் வாரியர்ஸ் அணியினர், மிக சமயோஜிதமாக யூ பி யோதா அணியின் முக்கியப் புள்ளிகளை அவுட் ஆக்கி, பெஞ்சில் உட்காரவைத்து அழகு பார்த்தார்கள்.   

பெங்கால் வாரியார்ஸ் அணியின் டிஃபென்ஸ்சில் ரொம்பவும் ஸ்ட்ராங்காக இருந்தார்கள். திரும்பிய பக்கமெல்லாம் அடி. அதனால்,  என்னசெய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நின்றார்கள். முதல் பாதி ஆட்டத்தில், யூ பி யோதா அணியினர் 8 புள்ளிகள் பெற்றிருந்தார்கள். பெங்கால் வாரியர்ஸ் அணியினர் 22 புள்ளிகள் பெற்றதோடு, 14   புள்ளிகள்  வித்தியாசத்தில் முன்னனியில் இருந்தார்கள். 

இரண்டாம்  பாதி ஆட்டம் தொடங்கியும் யூ பி யோதா அணியினர் சிங்கிள் டிஜிட்டைத் தாண்டவில்லை. அதே நேரத்தில், அவர்களுடைய கேப்டன் நிதின் தோமர், காலில் அடிபட்டு பெஞ்சில் உட்கார்ந்திருந்தது  யூ பி யோதா அணியின்  பின்னடைவுக்கு பெரிய  காரணமாக அமைந்ததையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

பெங்கால் வாரியர்ஸ் அணியின் மனிந்தர் சிங் ரெய்டில் பின்னிப் பெடலெடுத்தார். யூ பி யோதா அணியினர், ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில்தான் டபுள்  டிஜிட்டைத் தொட்டார்கள். 16 புள்ளிகள் வித்தியாசத்தில் யூபி யோதா  அணியினர் பின்தங்கிக் கவலையில் ஆழ்ந்ததோடு, நம்பிக்கையில்லாமல் விளையாடினர். ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில், பெங்கால் வாரியர்ஸ் அணியினர் யூ பி யோதா அணியினரை மூன்றாவது முறையாக ஆல் அவுட் செய்து, பெஞ்சுக்கு அனுப்பினார்கள். 

பெங்கால் வாரியர்ஸ் அணியின்  இன்றைய ஆட்டத்தில், மூன்று பேர் அசத்தினார்கள். மனிந்தர் சிங் , ஜென்குன் லி , வினோத்குமார்   போன்றவர்கள் ரெய்டில் பாயின்ட்டுகள் எடுத்து, தங்கள் அணியின் வலிமைக்குப் பெரும் பங்கு வகித்தனர்.

யூ பி யோதா அணியினர், இரண்டாம் ஆட்டத்தின் முடிவில் 20 புள்ளிகளை மட்டுமே பெற்று, பெரும் தோல்வியைச் சந்தித்தார்கள். பெங்கால் வாரியர்ஸ் அணியினர் 40 புள்ளிகள் பெற்று, 20 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்கள்.