Published:Updated:

சோலைராஜன் மகளின் திருமணத்துக்கு சீர்வரிசைப் பொருள்களைப் பரிசளித்த ஓ.பி.எஸ்..!

எம்.கணேஷ்
சோலைராஜன் மகளின் திருமணத்துக்கு சீர்வரிசைப் பொருள்களைப் பரிசளித்த ஓ.பி.எஸ்..!
சோலைராஜன் மகளின் திருமணத்துக்கு சீர்வரிசைப் பொருள்களைப் பரிசளித்த ஓ.பி.எஸ்..!

திருச்சி விமான நிலையத்தில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தாக்க கத்தியுடன் வந்தாகக் கூறி, சோலைராஜன் என்பவர், கைதுசெய்யப்பட்டார். அவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர் என்பது பன்னீர்செல்வத்துக்கு பின்னர் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர் மகள் திருமணத்துக்குத் தேவையான சீர்வரிசைப் பொருள்களை பன்னீர்செல்வம் கொடுத்துள்ளார்.

திருச்சியைச் சேர்ந்த சோலைராஜன், "பல வருடங்களாக அ.தி.மு.க-வில் இருப்பதாகவும். கழகத்தின் தீவிர தொண்டன் என்றும், அவர், பன்னீர்செல்வத்தை சந்தித்து அவருடன் போட்டோ எடுத்துவிட்டு, அப்படியே தனது மகளின் திருமணத்துக்கு உதவி கேட்பதற்காகவே, பன்னீர்செல்வத்தை நெருங்கியதாகவும், அவரது இடுப்பில் பால் பாக்கெட் அருப்பதற்காக கத்தி எப்போதும் வைத்திருப்பார், அதைப் பார்த்த பாதுகாப்புப்படை வீரர்கள் அவரைக் கைதுசெய்ததாகவும்" சோலைராஜனின் மனைவி தெரிவித்திருந்திருந்தார்.

தனது மகளுக்கு திருமண உதவி கேட்டு தன்னை நெருங்கிய சோலைராஜன், தனது ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டதை அறிந்த பன்னீர்செல்வம், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனது இல்லத்துக்கு சோலைராஜன் மற்றும் அவரது மனைவி ராஜேஷ்வரியை அழைத்து, அவர்களின் மகள் திருமணத்துக்குத் தேவையான சீர்வரிசைப் பொருள்களை வழங்கினார்.  இச்சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.