Published:Updated:

எஸ்.பி-க்கு ராக்கி அணிவித்த தனியார் பள்ளி மாணவர்கள்!

துரை.வேம்பையன்
எஸ்.பி-க்கு ராக்கி அணிவித்த தனியார் பள்ளி மாணவர்கள்!
எஸ்.பி-க்கு ராக்கி அணிவித்த தனியார் பள்ளி மாணவர்கள்!

இந்தியர்கள் அனைவரும் சகோதர, சகோதரிகள் என்ற உயரிய கருத்தை வலியுறுத்தும் 'ரக்ஷா பந்தன்' பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. கரூர் மாவட்டத்திலும் அந்த விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கரூர் பரணி பார்க் தனியார் பள்ளியைச் சேர்ந்த சாரண, சாரணியர், பகலும் இரவும் என்று நேரம் பாராமல் கடமை உணர்வோடு நாட்டுக்கும், பொதுமக்களுக்கும் சேவை ஆற்றி வரும் கரூர் மாவட்ட காவல்துறையினரோடு இந்த விழாவை கொண்டாடினர். கரூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜசேகரன், ஏ.டி.எஸ்.பி-க்கள் ஜெயச்சந்திரன், தங்கதுரை, டி.எஸ்.பிக்கள் திவ்யா, கீதாஞ்சலி, அண்ணாதுரை, தனிப்பிரிவு ஆய்வாளர் பிரான்சிஸ் மற்றும் கரூர் மாவட்ட காவல்துறையினருக்கு ராக்கி அணிவித்து தங்களது அன்பையும், மரியாதையையும் வெளிப்படுத்தினார்கள்.

இதுசம்பந்தமாக நம்மிடம் பேசிய பரணி பார்க் பள்ளியைச் சேர்ந்த சாரண, சாரணியர் சிலர், "இந்த வருடம் ரக்ஷா பந்தனை சிறப்பாக கொண்டாடத் தீர்மானித்தோம். அதற்கு எங்கள் பள்ளி நிர்வாகமும் முழு ஒத்துழைப்பு தந்தது. நம்மை தீயவர்களிடம் இருந்து காக்கும், தப்புகள் செய்து சமூகத்தை சீரழிக்கத் துடிக்கும் கயவர்களிடம் இருந்தும் நம்மை இரவு, பகல் பாராமல், கண் துஞ்சாமல் காவல் பணியை செய்யும் காவல்துறையினருக்கு இன்றைய தினத்தில் எங்களின் அன்பையும், மரியாதையையும் காணிக்கையாக்க நினைத்தோம். அதன் வெளிப்பாடே மாவட்ட எஸ்.பி தொடங்கி கீழ்மட்டத்தில் உள்ள கான்ஸ்டபிள் வரை அனைவருக்கும் ராக்கி கட்டி, எங்களது அன்பை தெரிவித்தோம். அவர்களும் எங்கள் அன்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்கள். மகிழ்ச்சி" என்றார்கள்.