Published:Updated:

உயரதிகாரிகள் டார்ச்சர் ? சென்னை போலீஸ்காரர் தற்கொலை

குருபிரசாத்
ந.பா.சேதுராமன்
உயரதிகாரிகள் டார்ச்சர் ? சென்னை போலீஸ்காரர் தற்கொலை
உயரதிகாரிகள் டார்ச்சர் ? சென்னை போலீஸ்காரர் தற்கொலை

சென்னையில், போக்குவரத்துக் காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை வேளச்சேரி காவல்நிலையத்தில் போக்குவரத்துக் காவலராக இருந்தவர் வெங்கடாசலம். இவர் நேற்று (திங்கள்) மாலை கை மணிக்கட்டில் ரத்தம் சொட்டிய நிலையில் வீட்டில் மயங்கிக் கிடந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, உறவினர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வெங்கடாசலம் முன்னரே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 

இதனிடையே "வழக்கு ஒன்றில் வெங்கடாசலத்தை  போலியாக தொடர்புப்படுத்தி உயரதிகாரிகள் கொடுத்த டார்ச்சரே தற்கொலைக்குக் காரணம்" என்கின்றனர் வெங்கடாசலம் உறவினர்கள். இதனால், இந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் கிளப்பியுள்ளது.