Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

போட்டோ எடுக்குறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா நியாயமாரே?

போட்டோ எடுக்குறது ஏதோ சாதாரணமான விஷயம்னு நினைச்சு அதைக் கலாய்க்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க. ஆனா, போட்டோவுக்கு போஸ் கொடுக்குறது, சளைக்காம போட்டோ எடுத்துகிட்டே இருக்குறது எல்லாம் அவ்வளவு ஈஸி இல்ல. ஆர்மி, நேவில எல்லாம் மெடல் வாங்குற அளவுக்கு வீரமும் விவேகமும் வேதாளமும் தேவை!

தினமும் நாலு போட்டோவாச்சும் எடுத்து அதை வாட்ஸ் அப்லயோ ஃபேஸ்புக்லயோ போடலைன்னா அந்த நாள் விடிஞ்ச மாதிரியே இருக்காதுனு சலிச்சுக்குறவங்க சூழ் உலகத்துலதான் நாம வாழ்ந்துட்டு இருக்கோம் மக்களே. இந்த விஷயத்தில பாலின வேறுபாடோ வயது வித்தியாசமோ இல்லவே இல்ல. துக்கமோ, சந்தோஷமோ, அழுகையோ, சிரிப்போ அதை ஒரு போட்டோவா எடுத்து போடுறதுலதான் என்ன ஒரு ஆனந்தம். இப்படி கொஞ்சம் கொஞ்சமா போட்டோக்கள் எடுத்து போட்டோஜெனிக் ஆகுறதுக்கு பின்னால எவ்வளவு உழைப்பு இருக்கு தெரியுமா? தினமும் இதையே ஒரு பொழப்பா வச்சுகிட்டு திரியணும். 

போட்டோ

முதலும் முக்கியமுமான கண்டிஷன் நம்ம முகத்துக்கும் உடம்புக்கும் எப்படிப்பட்ட ஆங்கிள் கரெக்டா இருக்கும்னு கணிக்கணும். ஒல்லியா இருக்குறவங்க சைடுல திரும்பி எல்லாம் போஸ் தரவே கூடாது. நேருக்கு நேர் தில்லா நின்னுதான் போட்டோ எடுத்துக்கணும். அதுவே கொஞ்சம் கொழுக்மொழுக் ஆளுங்கன்னா கொஞ்சம் கஷ்டப்படணும். ஒரு சைட் ஒருக்களிச்சு உட்கார்ந்தோ, பாதி மறைஞ்சு நின்னோதான் எடுக்கணும். போட்டோ க்ளிக்கும் போது மூச்சுப்பயிற்சி தெரிஞ்சிருக்க வேண்டியது அவசியம். அப்பதான் பெல்லி இல்லாம ஒல்லியா தெரியலாம்.

செல்ஃபி எடுக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம் நம்ம எங்க நிக்குறோம்கிறதுதான். உயரமா இருந்தா மட்டும்தான் மொபைலை கையில் வாங்கலாம். அதுவே கொஞ்சம் உயரம் கம்மினா போன் பக்கத்துல போகவே கூடாது. 'எனக்கு செல்ஃபி எடுக்கவே தெரியாது'னு நல்ல பிள்ளையா கேமராவுக்கு இரண்டாவது, மூணாவது ஆளா இருக்கணும். ரொம்பத் தள்ளிப் போனாலும் அவுட் ஆஃப் போகஸ் ஆயிடுவீங்க. உஷார்! 

      போட்டோ

தினமும் ஒரே போஸ் கொடுத்தா இந்த ஊர் நம்மளை மறந்துடும். முதுகு காமிச்சு நிக்கிறது, சைடுவாக்குல முறைக்குறது, உட்கார்ந்து போஸ், நின்னு போஸ், நடந்து போஸ், தவழ்ந்து போஸ், ஒரு காலைத் தூக்கி ஜிம்னாஸ்டிக் போஸ், இரண்டு காலையும் தூக்கி போஸ்(எப்படியா? ட்ரை பண்ணி பாருங்க), பல்லு காட்டி போஸ், வாயை மூடிப் பேசவும் போஸ்னு கிறுக்குத்தனங்களுக்கு அளவே இல்லாம இருக்கணும். ஏன்னா, நாம என்ன பண்ணாலும் இந்த உலகம் நம்மளை உத்துப் பார்க்கணும்னு ஒரு மகான் சொல்லியிருக்கிறார். 

புதுசா வாங்குன துணிமணில இருந்து செருப்பு வரைக்கும் எல்லாத்தையும் போட்டுப் போட்டு பார்த்து அதைக் க்ளிக்கி ஸ்டேட்டஸ் போட்டோவா வச்சே ஆகணும். அப்படியே இந்த தெருவுல போற நாய், வீட்டுல பாவமா இருக்க பூனை, பக்கத்து வீட்டுக் குழந்தை, சுருக்கங்கள் இருக்குற பாட்டினு யாரையும் விடாம கவர் பண்ணணும். நம்ம போட்டோல அவங்க எல்லாருமே சந்தோஷமா இருக்கிற மாதிரி காட்டிக்குறது முக்கியம். பழைய சோறா இருந்தாலும் சரி, பீட்சா பர்கரா இருந்தாலும் சரி, அதையும் எடுத்து பதிவிடணும்.

கல்யாணம், விசேஷம்னு போனா கட்டாயம் போட்டோக்கள் எடுத்தே ஆகணும். பொண்ணை உங்களுக்குத் தெரியுமா? மாப்பிளைக்கு உங்களைத் தெரியுமானு எல்லாம் கவலையே படக்கூடாது. பட்டுனு மேடையேறி படக்குனு க்ளிக்கிட்டு வந்துகிட்டே இருக்கணும். அப்படியே அங்கே இருக்குறதுலயே சூப்பர் காஸ்ட்யூம் போட்டுருக்கவங்களோடவும் ஒரு போட்டோ. கடமை முடிஞ்சது.          

எதற்கெடுத்தாலும் ஒரு ஹேஷ் டேக் உருவாக்கிட்டே இருக்கணும். ஒரே அர்த்தமா இருந்தாலும் அதையே நாலு விதமா போட்டு எல்லாரையும் நல்லா குழப்பிவிடணும். ஹேஷ் டேக் படிக்கவே பத்து நிமிஷம் ரவுண்ட் அடிச்சு கிறுகிறுனு வந்து எல்லாரும் உட்காந்துடணும். மத்தவங்கள ஒருவித கன்ஃபியூஸ்ட் ஸ்டேட்லயே வைச்சுருக்குறதுதான் நமக்கு பலமே.

தினமும் போட்டோ எடுத்து போஸ்ட் போடும்போது 'இன்னிக்கு நீ அழகா இருக்கியே'னு கமென்ட் வந்தா உள்ளுக்குள் அல்பமா சந்தோஷப்பட்டுகிட்டு, வெளியில் லேசா சிரிக்குற எமோஜி மட்டும் அனுப்பி சீன் போடலாம். அதுவே கேவலமா இருக்கனு சொன்னா தானைத்தலைவியின் தெய்வ வாக்கான 'நீங்க ஷட் அப் பண்ணுங்க'னு சொல்லிட்டு அடுத்த போட்டோ எடுக்க கிளம்பிட்டே இருக்கணும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement