Published:Updated:

விகடன் ஜன்னல்

விகடன் டீம்

விகடன் ஜன்னல்

விகடன் டீம்

Published:Updated:
விகடன் ஜன்னல்

ஏமி பாவம்... ஏமி பாவம்!

'ஏமி ஜாக்சன் அரை நிர்வாண போஸ்... ஷங்கர் டென்ஷன்... 'ஐ’ பட ஷூட்டிங் ரத்து’ என்று வரும் செய்திகள் எல்லாமே கப்ஸா! ஏமி 'செமி-நியூட்’ போஸ் கொடுத்தது உண்மை. ஆனால், அதற்கும் 'ஐ’ படப்பிடிப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. லண்டனில் உள்ள 'பாஸ் மாடல் மேனேஜ்மென்ட்’ மாடலிங் நிறுவன போட்டோஷூட்டுக்காக ரொம்ப நாள் முன்பு போஸ் கொடுத்திருக்கிறார் ஏமி. அப்படியான ஷூட் அங்கே சகஜம். ஆனால், பிரசாத் ஸ்டுடியோவில் 'ஐ’ பட பாடல் காட்சி செட் சும்மா கிடப்பதென்னவோ உண்மை. இதுவரை நடந்த படப்பிடிப்பில் பங்கு கொண்ட தொழிலாளர்களுக்கு சம்பளப் பிரச்னை. 'பாக்கியைக் கொடுங்க... வேலை பார்க்கிறோம்’ என்று சொல்லிவிட்டார்களாம். 'அவங்களுக்கு செட்டில் பண்ணிட்டுச் சொல்லுங்க. அதுவரை போஸ்ட் புரொடக்ஷன் பார்த்துட்டு இருக்கேன்!’ என்று மூழ்கிவிட்டார் இயக்குநர் ஷங்கர். 'ஆடியோ ரிலீஸுக்கு அர்னால்டை அழைச்சுட்டு வர்ற வேலையை இப்போ பார்க்கலாம்!’ என்று தயாரிப்புத் தரப்பு வேறு ஒரு பக்கம் வேகம் காட்ட, சும்மாவே கிடக்கிறது அந்தப் பல கோடி செட்.

வாட்ஸ்அப் கோபி!

போலீஸ் 100 வழி யோசித்தால், கிரிமினல்கள் 101 வழியை யோசிப்பார்கள்தானே! ஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியிட்டால் குண்டாஸ் போடப்படும் என்பதால், இப்போது சில வம்புதும்பு நெட்டிசன்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம்... வாட்ஸ்அப். யாரைத் திட்ட வேண்டுமோ, அதைக் குரல்பதிவாகப் பதிந்து வாட்ஸ்அப்பில் ஃபார்வர்டு செய்துவிடுகிறார்கள். அப்படி இப்போது 'திட்டு’ வாங்கிக்கொண்டிருப்பவர் 'நீயா? நானா?’ கோபிநாத். சமீபத்திய 'நீயா? நானா?’ நிகழ்ச்சியில், மருத்துவமனைகள் நோயாளிகளிடம் பணம் பிடுங்குவதற்காக தேவை இல்லாமல் பி.எம்.ஐ பரிசோதனை செய்யச் சொல்கிறார்கள் என்றரீதியில் கோபிநாத் விவாதத்தில் பேசியதில், யாரோ செம காண்டாகிவிட்டார்போல. 'பி.எம்.ஐனா என்னனு தெரியுமா? எடிட் பண்ணாம முழு ஷோ போட முடியுமா?’ என்றெல்லாம் கொந்தளித்து திட்டிப் பதிவேற்ற, அதுதான் தமிழக வட்டத்தில் வாட்ஸ்அப் வைரல்!

விகடன் ஜன்னல்

வீக் எண்ட் பரபரப்பு!

அழகிரியின் 'வாட் நெக்ஸ்ட்’ திட்டம் பற்றி எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்க, அவரது மருமகள் அனுஷா தயாநிதி நடத்திய திருவிழாவுக்கு குஷ்பு வந்தது சென்னை சென்சேஷன். 'நெஃபர்டாரி’ என்ற அமைப்பு மூலம் அனுஷா நடத்திய 'வீக் எண்ட் சந்தை’யைத் திறந்து வைத்தார் நடிகை குஷ்பு. 'குஷ்பு சீஃப் கெஸ்ட். என்ன ஸ்பெஷல்?’ என்று அனுஷாவிடம் விசாரித்தால்,

''ஹேய்... பத்தவெச்சிராதீங்க!'' என்று ஜாலியாகச் சிரிக்கிறார். ''குஷ்பு மேம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சந்தையை ரொம்ப சுவாரஸ்யமான பிரபலம் வந்து ஆரம்பிச்சா, நல்லா இருக்கும்னு நினைச்சேன். அதான் குஷ்பு. மத்தபடி வருஷத்துல ரெண்டே நாள் நடக்கும் இந்தச் சந்தைக்கும்

விகடன் ஜன்னல்

அனுமதி வாங்க அவ்வளவு அலையவேண்டி இருந்தது. சுயஉதவிக் குழுக்களுக்கு இலவச ஸ்டால், திருநங்கைகள் உரிமை தொடர்பான விழிப்புஉணர்வு ஸ்டால்கள்னு நல்ல பல விஷயங்கள் பண்றோம். போன வருஷம் 40 கடைகளோடு சந்தையை ஆரம்பிச்சோம். இந்த வருஷம் 80 கடைகள். வெரி வெரி ஹேப்பி ஹேப்பி!'' என்று பூரிக்கிறார்.

வாழ்த்தினால் வம்பு... வாழ்த்தலைனா அம்பு!

சண்டையில் சட்டை கிழிவதும், சர்ச்சையில் தி.மு.க அடிபடுவதும் சகஜம்தானே! விநாயகர் சதுர்த்தி அன்று தன் ஃபேஸ்புக் பக்கத்தில் 'விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்’ என்று ஸ்டாலின் வாழ்த்துவதாக ஸ்டேட்டஸ் விழுந்தது. 'ரம்ஜான், கிறிஸ்துமஸுக்கு வாழ்த்து சொல்ற தி.மு.க., எப்போதும் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாது. அந்த வகையில் இது நல்ல விஷயம்’ என்று ஆதரவாகவும், 'தி.மு.க., உருவ வழிபாட்டுக்கும் மூடநம்பிக்கைக்கும் எதிரான கட்சி. இப்படியெல்லாம் வாழ்த்து சொல்றது தப்பான முன்னுதாரணம்’ என்று விமர்சனங்களும் குபீரென முட்டி மோதிக்கொண்டன. சச்சரவு, ஃபேஸ்புக் சரகம் தாண்டி அறிவாலயம் வரை தீண்ட, 'திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் மு.க.ஸ்டாலினின் பிரத்யேக இணையதளத்தில், அவர் விநாயகர் சதுர்த்தி நாளன்று வாழ்த்துக்களை தெரிவித்ததாக வந்துள்ளது.

விகடன் ஜன்னல்

மு.க.ஸ்டாலினின் இணையதளத்தைப் பராமரிக்கும் சில தோழர்கள் ஆர்வமிகுதியின் காரணமாக, எல்லோரும் தெரிவித்திருப்பதைப்போல மு.க.ஸ்டாலினும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக வெளியிட்டுள்ளனர். இது மு.க.ஸ்டாலினின் முன் அனுமதியின்றி நடைபெற்ற செயலாகும். இந்த வாழ்த்துச் செய்தி, அவரது விருப்பத்தின்பேரில் பதிவானது அல்ல!’ என்று தி.மு.க தலைமைக் கழகம் அறிவிக்க, 'மத்த மதங்களுக்கு ஒரு நியாயம், இந்துக்களுக்கு ஒரு நியாயமா?’ என்றெல்லாம் பொங்கிப் பொருமுகிறார்கள் தி.மு.க எதிர்ப்பாளர்கள்.

யார் அந்த இருவர்?

20 வருடங்களுக்குப் பிறகு வில்லனாக நடிக்கிறார் சத்யராஜ். 'சிவாஜி’, 'எந்திரன்’ படங்களில் வில்லனாக நடிக்க மறுத்தவர், 'இசை’ படத்தில் வில்லனாக நடிக்கிறார். 'இரண்டு இசையமைப்பாளர்களுக்கு இடையிலான போட்டிதான் 'இசை’ படத்தின் கதை. இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மானை மனதில் வைத்தே அந்தக் கதையை உருவாக்கியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. 'இளையராஜா வேடத்தில் நடிக்கும் வாய்ப்பை பிரகாஷ்ராஜ் மறுக்க, அதில்தான் நடித்திருக்கிறார் சத்யராஜ்’ என்பது இண்டஸ்ட்ரி டாக். 'அப்படியா?’ என்ற கேள்விக்கு, 'ரெண்டு இசையமைப்பாளர்கள் பத்தின கதை. ஆனா, அது யாரையுமே குறிப்பிடலை. படம் நடிச்சுக்கொடுத்திட்டேன். மத்தபடி என் கேரக்டர் பேர்கூட எனக்குத் தெரியாதுங்க!’ என்கிறார் சத்யராஜ்.