வெளியிடப்பட்ட நேரம்: 07:32 (10/08/2017)

கடைசி தொடர்பு:07:32 (10/08/2017)

"இது ஹாலுசினேஷன் அல்ல... இன்ஸ்பிரேஷன்!" ட்ரம்ப்பின் பிக்பாஸ் சீக்ரெட் #MorningMotivation

ட்ரம்ப்

நடக்காத ஒரு விஷயத்தை நடந்ததாக கூறிக்கொண்டிருப்பதுதான் ஹாலுசினேஷன்...ஆனால் நடந்த சில விஷயங்களில் இருந்து வெறும் பாசிட்டிவ் விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டால் அது இன்ஸ்பிரேஷன். ஒரு நாளில் ஒரு மனிதர் வெறும் பாசிட்டிவ் விஷயங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு வாழ்ந்தால் அந்த  மனிதர் எப்படிப்பட்ட ஒரு நிலையில் இருப்பார் என்று நினைத்துப்பார்க்க தோன்றுகிறதா? அவர் அமெரிக்க அதிபராக இருக்கிறார். ஆம். பல கிண்டலுக்கு ஆளாகும் டொனால்ட் ட்ரம்ப்பின் தினசரி நடவடிக்கைகள் கட்டாயம் ஏதோ ஒரு நேரத்தில் நம் வாழ்க்கைக்குத் தேவைப்படும்.

அதிபர் ட்ரம்புக்கு அவரது வார் ரூம் அமைப்பு மூலம் தினசரி காலை 9:30 மணிக்கும், மாலை 4:30 மணிக்கும் 20 முதல் 25 பக்கங்களை கொண்ட ஒரு ஃபைல் கொடுக்கப்படும் அதில் ட்ரம்ப்பை பற்றிய பாசிட்டிவ் விஷயங்கள் மட்டுமே இருக்கும்.

முன்னதாக தினசரி ஆறு மணிக்குத் வார் ரூம் தனது வேலையை துவங்கும்.  ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் பதிவுகளை ஒருங்கிணைக்கும். இதில், வெள்ளை மாளிகை இமெயில்கள், ட்விட்டுகள், செய்திகள் மற்றும் இன்டர்வியூ ட்ரான்ஸ்கிரிப்டுகள் அடங்கும்.

இதனைக் கொண்டு ஃபைல்களைத் தயாரித்து காலை 9:30 மணிக்கும், மாலை 4:30 மணிக்கும் ஓர் அறிக்கையை வழங்கும். இந்த இரண்டு அறிக்கைகளும் அதிபரின் பார்வைக்குச் செல்லும்.  முன்னாள் தலைமை அதிகாரி ரெயின்ஸ் மற்றும் செய்தித் தொடர்பாளர் ஸ்பைசர் இருவரும் இந்தத் தகவல்களைக் கொண்டு 20 - 25 பக்க அறிக்கையைத் தயார் செய்வார்கள். அதனை, காலை 9:30 மணிக்கு ட்ரம்பிடம் அளிப்பார்கள். இதில், வெறும் பாசிட்டிவ் செய்திகளும், ட்ரம்பின் புகழ்பாடும் செய்திகளும் மட்டுமே இடம்பெறும். நெகட்டிவ் விஷயங்கள் தவிர்க்கப்படுமாம். ட்ரம்பைக் கெத்தாகக் காட்டும் புகைப்படங்கள், டி.வி ஷோக்கள் மட்டுமே இதில் இடம்பெறும்.

ட்ரம்ப்

தன்னைப்பற்றிய நெகட்டிவ் செய்திகளை தவிர்த்துவிட்டு எப்படி முன்னேற முடியும் என்றாலும். ஒருவர் தனது இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் போதும் சரி, தோல்வியின் பிடியில் சிக்கித் தவிக்கும் போதும் சரி. நெகட்டிவ் விஷயங்கள் நம்மை மேலும் கீழே அழுத்தும். அந்த நேரத்தில் பாசிட்டிவ் விஷயங்களை தவிர வேறு எதையுமே நாம் கவனிக்கவில்லை எனில் நாம் தோல்வியிலிருந்து எளிதில் மீள முடியும்.

காலையில் ஒரு வேலையை நெகட்டிவ் மனநிலையோடு துவங்கிப் பாருங்கள் அன்றைய நாளில் அந்த வேலை கண்டிப்பாக முடியாது. அப்படியே முடிந்திருந்தாலும் அது சிறப்பானதாக இருந்திருக்காது. ஆனால் நம் மீது நெகட்டிவ் விஷயங்கள் இருந்தாலும் பாசிட்டிவாக ஒருநாளை துவங்கி பாருங்கள் அன்றைய நாளின் வேலை சுலபமாக முடியும்.

ட்ரம்ப் மீதான விமர்சனம், மீம்ஸ்கள் இவற்றை ட்ரம்ப் கவனிப்பதில்லை. இதையெல்லாம் கவனித்தால் அவரால் அன்றைய நாளை அதிபராக சிறப்பாக துவங்க முடியாது என அவர் நம்புகிறார். இது அவருக்கு நல்லதோ, கெட்டதோ... தோல்வியின் பிடியில் சிக்கி இருக்கும், அல்லது வெற்றிக்காக போராடும் ஒருவர் ட்ரம்பிடம் இருந்து இந்த ஒரு விஷயத்தை பின்பற்ற வேண்டும். உங்களது பாசிட்டிவை மட்டும் 100 சதவிகிதம் பின் தொடருங்கள். நெகட்டிவ் எண்ணங்களை தவிருங்கள்.  அப்படி  பாசிடிவ் எண்ணங்களோடு இருந்தாலே போதும், அமெரிக்க ஜனாதிபதி ஆகிறோமோ இல்லையோ ஆஃபீஸில் அதிபதி ஆகலாம்!