Published:Updated:

2ம் வகுப்பு ரயில் பயணத்திற்கும் அடையாள அட்டை கட்டாயம்!

 2ம் வகுப்பு ரயில் பயணத்திற்கும் அடையாள அட்டை கட்டாயம்!
2ம் வகுப்பு ரயில் பயணத்திற்கும் அடையாள அட்டை கட்டாயம்!
 2ம் வகுப்பு ரயில் பயணத்திற்கும் அடையாள அட்டை கட்டாயம்!

புதுடெல்லி: ரயிலில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியில் பயணம் செய்யவும்  அடுத்த மாதம் முதல் அடையாள அட்டை கட்டாயமாகிறது.

ரயிலில் குளிர்சாதன பெட்டியைப் போலவே, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி  பெட்டியில் பயணம் செய்யும் பயணிகள் அடையாள அட்டையை வைத்திருக்க  வேண்டியது கட்டாயமாகிறது. இந்த நடைமுறை அடுத்த மாதம் முதல் அமலுக்கு  வருகிறது.

குளிர்சாதன பெட்டிகளில் அடையாள அட்டை இல்லாமல் பயணம் செய்பவர்கள், டிக்கெட்  இல்லாமல் பயணம் செய்யும் பயணிகளாக கருதப்படுகின்றனர்.
இந்த நடைமுறை பிப்ரவரி மாதம் 15ம் தேதியில் இருந்து அமலில் உள்ளது.

##~~##
இதேபோல், இரண்டாம் வகுப்பு பெட்டியிலும் இந்த நடைமுறையை கண்டிப்பாக  அமல்படுத்துமாறு ரயில்வே வாரியத்திற்கு ரயில்வே அமைச்சர் முகுல்ராய்  உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் யாராவது  ஒருவர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.
தனிநபராகப் பயணம் செய்பவர்கள், தனித்தனியாக அடையாள அட்டை வைத்திருக்க  வேண்டும். அப்படி இல்லாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் டிக்கெட் முறைகேடுகளைத்‌ தடுக்கவும், விபத்தின்போது ஆட்களை அடையாளம்  காணவும் இந்த நடைமுறை பயனுள்ளதாக இருக்கும் என்று ரயில்வே தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.