யானையின் கால்கள் தான் அதன் செல்ஃபோன் ஆன்டனா... எப்படித் தெரியுமா? #WorldElephantDay | Do you know how elephants use their legs for communication

வெளியிடப்பட்ட நேரம்: 17:48 (12/08/2017)

கடைசி தொடர்பு:17:48 (12/08/2017)

யானையின் கால்கள் தான் அதன் செல்ஃபோன் ஆன்டனா... எப்படித் தெரியுமா? #WorldElephantDay

யானையின்      

சிறு வயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த தருணத்தில் எங்கோ ஒரு மணியோசை கேட்கிறதே என்று நண்பர்களுடன் ஓடோடிச் சென்று பார்ப்போம் .  மெல்ல மெல்ல தன் உடலை ஆட்டி மேலே ஒருவனை சுமந்து கொண்டு நிதானமாக நடந்து வருவான். அவனைப் பார்த்து "ஐ... யானை" என்று கத்திக் கொண்டு அம்மாவிடம் போய் சொல்ல அம்மா நம்மை யானை சவாரி அனுப்பி வைப்பாரே மறக்க முடியுமா?

ஆனால் இந்தத் தலைமுறைக் குழந்தைகளுக்கு புத்தகங்களிலும் வலைதளங்களிலும் தான் யானையை அடையாளம் காட்டுகிறோம் . அந்தளவு தொழில்நுட்ப வசதி வளர்ந்திருக்கிறது என்று பெருமை கொண்டாலும் யானையை நேரில் பார்த்த திருப்தி கிடைக்குமா என்ன? 

யானைகளைப் பார்த்தாலே அதன் உயரமும் அகலமும் நம்மை பகிரங்கப்படுத்தும். இருப்பினும் அதைப் பார்த்து பார்த்தும் மறைந்திருந்தும் ரசிப்போம். ஆனால் இன்று, ‘யானையின் உயரம் 13 அடி வரை இருக்கும்; அது 70 வருடங்கள் வரை உயிர் வாழும்; சதை திடமாக இருக்கும்; இதற்கு நுகர்வு தன்மை அதிகம்’ என்றுதான் யானை அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. 

யானையின் இயல்புகள்

      *யானையின் காதுகள் பரந்துபட்டும் நீளமாகவும் இருக்கும். கோடைகாலங்களில் வெப்பம் தாங்க முடியாதல்லவா. அந்நிலையில் ஏற்படும் ரத்த சுழற்சியில்(blood circulation) அது தன்னைக் குளிர்வித்துக் கொள்ளுமாம். 

      *பாசம் மிகுந்த உயிரினம் என்றால் அது யானை தான்.  ஒரு யானைக் குட்டி தனக்கேதும் பிரச்னை எனில் அதன் அம்மாவிடம் போய் முறையிடுமாம் .  அதைக் கேட்ட அம்மா யானை தன் இனம் முழுவதையும் அழைத்துச் சென்று குட்டிக்கு நேர்ந்த துன்பத்தை நீக்குமாம்.

      *மனித இனமல்லாத பிற உயிரினங்களில் மிகவும் புத்திசாலியானதும் தன்னைத் தற்காத்துக் கொள்வதில் விழிப்புஉணர்வுடையதும் யானை இனம் தான். இதற்கு ஞாபக சக்தி மிகுதி. பரீட்சைகளில் படித்தது மறந்துவிட்டால் ஞாபகம் செய்வதற்கென ஒரு குட்டி யானையைக் கூட அழைத்துச் செல்லலாம். 

      *உலர்ந்த பருவமுடைய கோடைக் காலங்களில் நம்மைப் போன்று தான் அனைத்து உயிர்களும் நீரின்றி வாடும்.  அப்போது யானை என்ன செய்யும் தெரியுமா? தன்னுடைய தந்தத்தால் நிலத்தைத் தோண்டி நீரைப் பருகும்.  அந்த நீரைத் தனக்கென மட்டுமன்றி பிற உயிரினங்களுக்கும் கொடுத்து உதவி புரியும்.  அது தான் ‘தனக்கென வாழாதான் வாழ்க்கை’. 

      *காடுகளில் உணவுண்ணும் யானைகள் தான் உண்ட செடி கொடிகளில் இடைவெளியை ஏற்படுத்தும்.  அந்த இடைவெளியில் புதிய தாவரங்கள் வளரவும் சின்னஞ்சிறு விலங்கினங்கள் தனக்கான பாதைகளை உருவாக்கவும் இயலும். 

      * சமீபத்திய, ஆச்சரியமான தகவல் யாதெனில், யானைகள் தாங்கள் உருவாக்கும் sub-sonic rumble எனும் சுரப்பியால் கிரவுண்ட் ஃபாஸ்டராகப்(ground faster)   பயணித்து கம்யூனிகேட் செய்ய இயலும். அந்த யானை தரும் தகவலை பிற யானைகள் தன்னுடைய சென்சிடிவ் கால் மற்றும் தந்த சதைகளால் அறிந்து கொள்ளும் . 

   இப்படி எண்ணற்ற நல்ல நல்ல இயல்புகள் யானை இனத்தில் மிகுந்துள்ளன.  அறம் எந்தளவு சீர்கேடுகளை சந்திக்கிறதோ அந்தளவு யானை இனமும் அழிவுகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.  இனியும் இதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளாவிடில் டைனோசரைப் போன்று யானையும் அடையாளங்காண இயலாத மாறிவிடும்.

சமீபத்திய சர்வே ஒன்று 20-ம் நூற்றாண்டு வரையிலும் பல மில்லியன் அளவில் இருந்த ஆப்ரிக்க யானைகளின் எண்ணிக்கை இன்று 450000-700000-வரையில் குறைந்துள்ளது என்றும், 1,00,000-ற்கும் மேற்பட்ட அளவில் இருந்த ஆசிய யானைகளின் எண்ணிக்கை 35,000-40,000-வரையில் தான் இருக்கிறது என்றும் கூறியுள்ளது. 

எப்படி தடுக்கலாம்? 

*யானைத் தந்தங்களை(Ivory) காசு கொடுத்து வாங்குவதை விட வேண்டும். 

*Elephant friendly காப்பித்தூள் மற்றும் மரங்களை வாங்குவது நல்லது. 

*இயற்கை வளங்களை பாதுகாப்பதில் முனைப்புடன் செயல்பட வேண்டும்.  நம்மால் நேரடியாகக் களத்தில் இறங்க முடியாமல் போனாலும் அதற்கான நிறுவனங்களை அணுகி இயன்ற உதவிகளை செய்து தரலாம்.  

தினம் தினம் தினசரிகளில்  வந்து போகின்ற யானைகளின் இறப்பு குறித்த  செய்திகளில் எல்லாம் மர்ம மரணம் என்கிற வார்த்தை சர்வசாதாரணமாக வந்து போகிறது. அத்தனை பெரிய உருவம் உணவில்லாமல் அழைந்து திரிந்து உருக்குழைந்து தன் உருவத்தில் பாதியை தொழைத்து நிற்கும் போது அவ்வளவு வலி வந்து போகிறது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஒரு யானை குப்பைத் தொட்டியை கிளரி உணவு உண்பது என்பது ராஜா பிச்சை எடுப்பது போன்றே தெரிகிறது.

மேட்டுப்பாளையம் வன சரகத்தில் இறந்து கிடந்த யானையை பரிசோதித்ததில் அதன் இறப்பு உடைந்த கண்ணாடித்  துண்டிலிருந்து இருந்து ஆரம்பித்திருக்கிறது. காயம் பெரிதாக நடக்க முடியால் நின்ற இடத்தில் உயிரை விட்ட யானைக்கு யார் பொறுப்பேற்பது. குடித்துவிட்டு வனத்தில் வீசிய சாதாரண  பாட்டில் விலங்கு இனத்தை  அழிப்பது  எவ்வளவு பெரிய கொடுமை?

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்