Published:Updated:

தீவிரவாத தாக்குதலில் தமிழக வீரர் வீர மரணம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தீவிரவாத தாக்குதலில் தமிழக வீரர் வீர மரணம்!
தீவிரவாத தாக்குதலில் தமிழக வீரர் வீர மரணம்!

தீவிரவாத தாக்குதலில் தமிழக வீரர் வீர மரணம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தீவிரவாத தாக்குதலில் தமிழக வீரர் வீர மரணம்!

காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் இளையராஜா வீரமரணமடைந்தார்.  இளையராஜா சிவகங்கை மாவட்டம் கண்டனியைச் சேர்ந்தவர். இவருடன் சுமேத் என்ற ராணுவ வீரரும் மரணமடைந்துள்ளார். 

காஷ்மீரின் தெற்குப் பகுதி மாவட்டமான ஷோபியானில், தீவிரவாதிகளுக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் இடையே நேற்றிரவு ஏற்பட்ட மோதலில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மூன்று பேர் காயம் அடைந்தனர்.

சைனபோரா பகுதியில் அவ்னீரா கிராமத்தில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து ராணுவத்தினருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இரண்டு வீரர்கள் உயிரிழந்ததாக ஜம்மு-காஷ்மீர் போலீஸார் தெரிவித்தனர். இந்நிலையில் உயிரிழந்த இரண்டு பேரில் ஒரு வீரர் தமிழகத்தை சேர்ந்த இளையராஜா என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு