Published:Updated:

48 பேரை பலிவாங்கிய நிலச்சரிவு... இமாசலப்பிரதேசத்தில் சோகம்!

48 பேரை பலிவாங்கிய நிலச்சரிவு... இமாசலப்பிரதேசத்தில் சோகம்!
48 பேரை பலிவாங்கிய நிலச்சரிவு... இமாசலப்பிரதேசத்தில் சோகம்!

48 பேரை பலிவாங்கிய நிலச்சரிவு... இமாசலப்பிரதேசத்தில் சோகம்!

இமாசலப் பிரதேசத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி 48 பேர் உயிரிழந்துள்ளனர். இது அம்மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடமாநிலங்களில் கடந்த சிலநாள்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. பலர் உயிரை இழந்துள்ளனர். வீடு, பொருள்கள், வாகனங்கள் எனத் தங்கள் உடைமைகளையும் பறிகொடுத்துள்ளனர். குறிப்பாக இமாசலப் பிரதேசம் கடும் சேதங்களைச் சந்தித்து வருகிறது. அம்மாநில நிலப்பரப்பு பெரும்பாலும் மலைப் பிரதேசங்களைக் கொண்டிருப்பதால் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. 

இமாசலப் பிரதேசத்தின் முக்கிய மாவட்டமான மாண்டியில் நிலச்சரிவு ஏற்பட்டது. மாண்டி மற்றும் பதான்கோட் பகுதிக்கு இடையே உள்ள நெடுஞ்சாலையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து உட்பட வாகனங்கள் இந்த நிலச்சரிவில் சிக்கின. சில வாகனங்கள் 800 மீட்டர் பள்ளத்தாக்கில் விழுந்தது. அப்பகுதியில் இருந்த குடியிருப்புப் பகுதிகளும் இந்நிலச்சரிவில் சிக்கின. பேரிடர் மீட்புக்குழுவினர் விரைவாக செயல்பட்டனர். ஆனால், தொடர் மழை பெய்து வந்ததால் அவர்களது பணியும் முடங்கியது. முதற்கட்டமாக 15 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. தற்போது, இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்ச ரூபாய் நிவாரணமாக அளித்துள்ளார் அம்மாநில முதல்வர். இந்தச் சம்பவம் குறித்து ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

அடுத்த கட்டுரைக்கு