Published:Updated:

விசாரணைக்கு அழைத்துச் சென்றவர் மரணம்! காவல் நிலையத்துக்குப் பலத்த பாதுகாப்பு

விசாரணைக்கு அழைத்துச் சென்றவர் மரணம்! காவல் நிலையத்துக்குப் பலத்த பாதுகாப்பு
விசாரணைக்கு அழைத்துச் சென்றவர் மரணம்! காவல் நிலையத்துக்குப் பலத்த பாதுகாப்பு

விசாரணைக்கு அழைத்துச் சென்றவர் மரணம்! காவல் நிலையத்துக்குப் பலத்த பாதுகாப்பு

விசாரணைக்கு அழைத்துச் சென்றவர் மரணம்! காவல் நிலையத்துக்குப் பலத்த பாதுகாப்பு

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி உயிரிழந்தார். இந்த லாக்-அப் மரணம் காரணமாக காவல்நிலையத்துக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் சீவலார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. அடிதடி, தகராறு, கொலை எனப் பல்வேறு சம்பவங்களில் பழனி ஈடுபட்டதால்  3 கொலை வழக்குகள் உள்பட 20 வழக்குகள் அவர்மீது நிலுவையில் உள்ளன. இவர் சொந்த ஊரில் இருக்கையில் ஏதாவது பிரச்னைகளை ஏற்படுத்துவதால் அடிக்கடி அவரைத் தேடி போலீஸார் வருவது வழக்கமாக இருந்தது. அதனால், அவர் சொந்த ஊரில் இருப்பதை விடவும் வெளி இடங்களிலேயே தங்கி வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சொந்த ஊருக்கு வந்த பழனி, நேற்று இரவு நண்பர் ஒருவருடன் பைக்கில் சென்று விட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது நடந்த வாகன சோதனையின் போது, பழனியை போலீஸார் கண்டுபிடித்தனர். அதனால் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவருடன் சென்ற நண்பரை அனுப்பி விட்டு பழனியை மட்டும் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். 

விசாரணைக்கு அழைத்துச் சென்றவர் மரணம்! காவல் நிலையத்துக்குப் பலத்த பாதுகாப்பு

அங்கு அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவரை போலீஸார் அடித்ததாகத் தெரிகிறது. இதனால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றிய தகவல் அறிந்ததும் பழனியின் உறவினர்கள் காவல் நிலையத்தின் முன்பாகத் திரண்டனர். ’போலீஸார் பழனியை அடித்துக் கொன்று விட்டு நாடகம் ஆடுகிறார்கள். ஊரில் தங்க விடாமல் பழனியை விரட்டிய போலீஸார், தற்போது அடித்து கொலை செய்து விட்டார்கள். அவரது கால் மற்றும் உடலில் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட காயங்கள் இருகின்றன’ என்று தெரிவித்த உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து ஆலங்குளம் காவல்நிலையத்துக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டது. இந்த லாக்-அப் மரணம் பற்றி அறிந்ததும், நெல்லை மாவட்ட எஸ்.பி-யான அருண்சக்தி குமார், ஆலங்குளம் காவல் நிலையத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். நடந்த சம்பவங்கள் குறித்து அவர் போலீஸாரிடம் கேட்டு அறிந்தார். அத்துடன், காவல் நிலையத்துக்குப் பலத்த பாதுகாப்பு அளிக்கவும் நடவடிக்கை எடுத்தார். 

இந்தச் சம்பவம் பற்றி போலீஸார் கூறுகையில், ‘பழனி மீது நிறைய வழக்குகள் நிலுவையில் இருந்ததால், அவரிடம் விசாரணை நடத்த அழைத்துச் சென்றோம். இரவில் அவர் நெஞ்சு வலிப்பதாகத் தெரிவித்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்தோம். முன்னதாக, அருகில் உள்ள மருத்துவரை அழைத்து வந்து முதலுதவி கொடுக்க முயன்றோம். ஆனால், அவர் வந்து பார்த்து விட்டு ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்து விட்டார்கள்’ என்கிறார்கள்.

இந்த லாக்-அப் மரணம் விவகாரம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.    

அடுத்த கட்டுரைக்கு