Published:Updated:

6 திட்டப்பணிகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

6 திட்டப்பணிகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
6 திட்டப்பணிகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

6 திட்டப்பணிகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதியாக தன் முதல் திட்ட ஒப்புதலில் கையெழுத்திட்டுள்ளார்.


கடந்த 17-ம் தேதி இந்தியாவின் 14 வது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதிலும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் நடைபெற்ற தேர்தலில் 99% வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் 20-ம் தேதி எண்ணப்பட்டன. இதில் பா.ஜ.க வேட்பாளரான ராம்நாத் கோவிந்த் 65% வாக்குகள் பெற்று நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் குடியரசுத் தலைவராக கடந்த 25-ம் தேதி பதவியேற்றார்.

இந்நிலையில் ஜனாதிபதியாக நாட்டின் திட்ட ஒப்புதல்களுக்கு முதல் முறையாகக் கையெழுத்திட்டுள்ளார் ராம்நாத் கோவிந்த். பதவியேற்றதிலிருந்து இதுவரையில் ஆறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். கடற்படை அதிகார எல்லை மற்றும் கடல் சார் உரிமை கோரிக்கை தீர்வு சட்ட மசோதா-2017, இலவசம் மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகள் உரிமை (திருத்தம்) சட்ட மசோதா, புள்ளி விவரங்கள் சேகரிப்பு (திருத்தம்) சட்ட மசோதா, இந்தியத் தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவன (பொது மற்றும் தனியார்த் துறை பங்களிப்புடன்) மசோதா, தேசிய தொழில் நுட்பம், அறிவியல் கல்வி, ஆராய்ச்சி (திருத்தம்) சட்ட மசோதா, காலணி வடிவமைப்பு, அபிவிருத்தி கல்வி நிறுவன சட்ட மசோதா ஆகிய ஆறு நாடாளுமன்ற ஒப்புதல் பெற்ற திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் வகையில் கையெழுத்திட்டார்.
 

அடுத்த கட்டுரைக்கு