Published:Updated:

நிலநடுக்க ஆய்வு: அபாயப் பட்டியலில் இந்தியாவின் முக்கியத் தலைநகரங்கள்!

நிலநடுக்க ஆய்வு: அபாயப் பட்டியலில் இந்தியாவின் முக்கியத் தலைநகரங்கள்!
நிலநடுக்க ஆய்வு: அபாயப் பட்டியலில் இந்தியாவின் முக்கியத் தலைநகரங்கள்!

நிலநடுக்க ஆய்வு: அபாயப் பட்டியலில் இந்தியாவின் முக்கியத் தலைநகரங்கள்!

'நிலநடுக்க இயல்' எனப்படும் நிலநடுக்கம்குறித்த சமீபத்திய ஆய்வு ஒன்றில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


தேசிய நிலநடுக்க இயல் மையம் சார்பில் இந்தியாவின் 29 நகரங்கள் ‘அபாய’ நகரங்களின் பட்டியலில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் முக்கியத் தலைநகரங்களின் பெயர்களும் இடம் பெற்றிருப்பதால், பதற்ற நிலை அதிகரித்தே காணப்படுகிறது. இந்த
29 நகரங்களும் ’கடுமையான’ நிலநடுக்க அதிர்வுகளைச் சந்திக்க உள்ள நகரங்களின் பட்டியலிலிருந்து ‘மிகவும் கடுமையான’ பாதிப்புகளைச் சந்திக்க உள்ள நகரங்களின் பட்டியலுக்கு முன்னேறி உள்ளது.

தேசிய நிலநடுக்க இயல் வெளியிட்டுள்ள பட்டியலில் முக்கிய நகரங்களான டெல்லி, பாட்னா, ஸ்ரீநகர், புதுச்சேரி, சிம்லா, இம்பால் போன்ற முக்கியத் தலைநகரங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ’புதுச்சேரி’ பகுதியில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான அபாயம் மிகவும் கடுமையாகவே உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து மத்திய அரசின் சார்பில் பாதுகாப்பு மற்றும் விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காக இரண்டு செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ‘இந்தியா குவேக்’ (India Quake) மற்றும் ‘சாகர் வாணி’ (Sagar Vani) என இரண்டு செயலிகள் நிலநடுக்கம்குறித்த அறிவிப்பைக் கணித்து, தகவல் வெளியிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
 

அடுத்த கட்டுரைக்கு