Published:Updated:

டெல்லியில் போராடிய விவசாயிகள் திடீர் வெளியேற்றம்!

டெல்லியில் போராடிய விவசாயிகள் திடீர் வெளியேற்றம்!
டெல்லியில் போராடிய விவசாயிகள் திடீர் வெளியேற்றம்!

independence day

டெல்லி, ஜந்தர் மந்தரில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அய்யாகண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள் போராட்டங்களை நடத்தினர். அப்போது நடந்த போராட்டம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. அப்போது, மாநில அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவித்தார், அய்யாக்கண்ணு. கடந்த சில நாள்களுக்கு முன்னர் மீண்டும் விவசாயிகளை ஒருங்கிணைத்து போராட்டத்தை தனது தலைமையில் துவக்கினார், அய்யாக்கண்ணு. வாயில் பிளாஸ்திரி ஒட்டுதல், மண்டையோடுகளை மாலையாக அணிதல் என நூதனப் போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில், இன்று இரவு போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளில் ஒரு பகுதியினரை போலீஸார் வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர். நாளைச் சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி முழுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருப்பதால் அங்கிருந்து விவசாயிகளை அப்புறப்படுத்தி இருக்கிறார்கள். நாளைமறுநாள் வழக்கம்போல மறுபடியும் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு