Published:Updated:

மம்தாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு மனு விசாரணைக்கு ஏற்பு!

மம்தாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு மனு விசாரணைக்கு ஏற்பு!
மம்தாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு மனு விசாரணைக்கு ஏற்பு!
மம்தாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு மனு விசாரணைக்கு ஏற்பு!

கொல்கத்தா: நீதிமன்ற தீர்ப்புகள் விலைக்கு வாங்கப்படுவதாக கூறியதற்காக, மேற்கு  வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற  அவமதிப்பு மனுவை கொல்கத்தா நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

கடந்த 14 ம் தேதி சட்டசபையில் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி,  நீதிமன்ற தீர்ப்பு சில நேரங்களில் விலை கொடுத்து வாங்கப்படுவதாகவும்,பணம்  உள்ளவர்கள் தங்களுக்கு சாதகமான தீர்ப்புகளை பெற்றுவிடலாம் என்றும் கூறியிருந்தார்.

##~~##
இதனை எதிர்த்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற அவமதிப்பு மனுவை கொல்கத்தா  நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.ஆனால் அதனை நிராகரித்த நீதிமன்றம், இதே  பிரச்னையை பொதுநலன் மனுவாகத் தாக்கல் செய்யலாம் என்று ஆலோசனை கூறியது.
இதையடுத்து,இன்று பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.இம்மனுவை இன்று  விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், உரிய ஆதாரத்தை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.