Published:Updated:

புதுச்சேரியில் மீண்டும் விமானப் போக்குவரத்து தொடங்கியது

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, புதுச்சேரியில் மீண்டும் விமான சேவையை முதலமைச்சர் நாராயணசாமி இன்று தொடங்கிவைத்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு, ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரியிலிருந்து பெங்களூருக்கு விமானங்கள் இயக்கப்பட்டன. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு வருவாய் வராதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் கட்சி, மீண்டும் விமான சேவையைத் தொடங்குவதற்கான பணிகளை மேற்கொண்டது.

 சிறிய நகரங்களுக்கும் விமான சேவையை அளிக்கும் வகையில், மத்திய அரசு ‘உதான்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் இந்த விமான சேவையில் ஏற்படும் இழப்புகளை மத்திய அரசோடு மாநில அரசும் பகிர்ந்துகொள்ளும். இந்தச் சேவையை ஏற்றுக்கொண்ட புதுச்சேரி அரசு, மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகத்திடம் ஒப்பந்தம் போட்டது. அதன்படி முதல் கட்டமாக, புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத்துக்கு விமானத்தை இயக்க முடிவெடுத்தது. விதிமுறைகளுக்கு உட்பட்டு, ’ஸ்பைஸ் ஜெட்’ நிறுவனம் விமானங்களை இயக்க முடிவெடுத்தது. அதற்கான கட்டணங்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

அதன்படி நேற்று (16.08.2017) காலை 10 மணிக்கு, புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து காலை 11.40 மணிக்கு ஹைதராபாத்துக்கு செல்லும் முதல் விமான சேவையை முதல்வர் நாராயணசாமி தொடங்கிவைத்தார். 78 இருக்கைகள்கொண்ட இந்த விமானத்தில், புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத் செல்ல 2,449 ரூபாய் கட்டணம் ஆகும்.