Published:Updated:

சர்ச்சையைக் கிளப்பிய கிளாராவின் மரணம்: தொடரும் விசாரணை

கொல்கத்தாவில், தனது குடியிருப்பிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த விமானப் பணிப்பெண் கிளாராவின் மரணம், தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேகாலயா மாநிலம், ஷில்லாங்கைச் சேர்ந்தவர் கிளாரா கோங்சிட். 22 வயதான இவர், ஒரு தனியார் விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக வேலை செய்துவந்தார். கடந்த புதன்கிழமை காலை, மரணமடைந்த நிலையில் கிளாராவின் உடல், அவரது அப்பார்ட்மென்டின் கீழே கண்டெடுக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு, நான்காவது மாடியில் உள்ள இவரது ஃப்ளாட்டின் ஜன்னல் வழியாக இவர் கீழே விழுந்து உயிரிழந்துவிட்டதாகக் கூறப்பட்டது. 

கொல்கத்தா போலீஸார் நடத்திய விசாரணையில், ‘கிளாரா தனது நண்பரின் பிறந்தநாளை தன் வீட்டில் கொண்டாடியுள்ளார். சம்பவ நேரத்தின்போது மொத்தம் இரண்டு பேர் கிளாராவின் ஃப்ளாட்டில் இருந்துள்ளனர். அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்த இருக்கிறோம். மேலும், கிளாராவின் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம். அது வந்த பின்னரே, இவர் மரணத்தில் உள்ள சந்தேகங்கள் நீங்கும்’, என்றனர். தடயவியல் நிபுணர் குழுவும் சம்பவ இடத்தை ஆய்வுசெய்தனர். மேலும், அவர் பணியாற்றிய தனியார் விமான நிறுவன ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.