’பாகுபலியை பிரமாண்டமாக்கிய அந்த 400 பேர்!’’- புதியதோர் ஃபேஷன் செய்வோம் (sponsored content)

மேலை நாடுகளின் நாகரிகத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த நிலை அகன்று, இன்று நமக்கான ஃபேஷனை நாமே உருவாக்கி, மற்ற நாட்டவர்கள் நம்மை வியந்து பார்த்து ஏற்றுக்கொள்ளும் வகையில் உயர்ந்திருக்கிறோம். 

நியூசிலாந்தைச் சேர்ந்த `நியூசிலாந்து இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி’யின் (NZFT) 15 மாணவர்கள், அந்நாட்டு பிரதம மந்திரியின் ஸ்காலர்ஷிப் திட்டத்தின்மூலம் ஆறு வார இன்டர்ன்ஷிப் புரோகிராமுக்காக சத்தியமங்கலம் ‘பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி’ (BIT) கல்லூரிக்கு வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் திருப்பூரில் உள்ள பல்வேறு கார்மென்ட் தயாரிப்பு நிறுவனங்களுக்கும், பொள்ளாச்சியில் உள்ள கைத்தறி சேலை நெய்யும் நிறுவனத்துக்கும் சென்று நம்முடைய டெக்ஸ்டைல் மற்றும் கைத்தறி நுட்பங்களைக் கற்றுக்கொண்டனர். 

இதுகுறித்து, ஒலிவியா என்னும் நியூசிலாந்து மாணவி கூறுகையில், “நியூசிலாந்தில் டெக்ஸ்டைல் தயாரிப்பு பற்றிய விஷயங்களை ஏட்டளவில்தான் கற்றுக்கொள்ள முடியும். ஆனால், இங்கே ஒவ்வொரு விஷயத்தையும் அந்தத் துறையில் சிறந்த நிபுணர்களிடமிருந்து நேரிடையாகத் தெரிந்துகொண்டோம். இந்தியாவைப் பற்றியும் அதன் ஃபேஷன் துறை பற்றியும் மறக்க முடியாத அனுபவங்களுடன் திரும்பிச் செல்கிறோம்” என்றார். 

நியூசிலாந்து மாணவர் குழுவுடன் சேர்ந்து பயின்ற பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவி அமீரா, “இந்தக் கல்வித் திட்டத்தின் மூலம், நியூசிலாந்து மாணவர்களும் நம் மாணவர்களும் இணைந்து தத்தமது கலாசாரம் மற்றும் ஃபேஷன் உடைத் தேர்வுகள் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டோம். இதனால், உலகச் சந்தைக்கேற்ற ஃபேஷன் ஆடைகளை எங்களால் விரைவாக வடிவமைக்க முடிகிறது. கல்லூரியில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ‘ஃபேஷன் ரிசோர்ஸ் சென்டர்’ எங்களுடைய விதவிதமான ஃபேஷன் ஐடியாக்களைச் செயல்படுத்திப் பார்க்கும் களமாக இருக்கும் என்று எண்ணுகிறோம்” என்று ஆவலுடன் கூறினார். 

கல்லூரியில் ஃபேஷன் பயில்வதற்காக, ஒரு புதிய ‘ஃபேஷன் ரிசோர்ஸ் சென்ட’ரைத் தொடங்கி வைத்துப் பேசிய இந்தியா டிசைன் போரம் நிறுவனரான, திருமதி ராஜ் பதி அவர்கள், “பாகுபலி திரைப்படத்தில் சுமார் 1,500 டிசைனர்களும், குறிப்பாக 400 ஃபேஷன் டிசைனர்களும் சேர்ந்து உருவாக்கியதுதான் அந்தப் பிரமாண்ட அரங்க அமைப்புகளும், நம்மை வியக்க வைத்த ஆடை வடிவமைப்பும். ஆகையால், திறமையான டிசைனர்களுக்கு வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது” என்று ஊக்கமளித்தார். 

அதைத் தொடர்ந்து நடைபெற்ற (BANEWZ-17) எனும் ‘சர்வதேச ஃபேஷன் ஷோ’வில் நியூசிலாந்து மாணவர்கள் இந்திய உடையிலும், இந்திய மாணவர்கள் நியூசிலாந்து உடையிலும் பங்கேற்றனர்.

பண்ணாரி அம்மன் கல்லூரியின் சேர்மன் திரு. S.V. பாலசுப்பிரமணியம், “இந்தியாவில் ஃபேஷன் பயிலும் மாணவர்களுக்கு உலகம் முழுவதும் வாய்ப்புகள் இருக்கின்றன. இக்கல்லூரி நியூசிலாந்து இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியுடன் மேற்கொண்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்மூலம் இதுவரை 95 நியூசிலாந்து மாணவர்கள் இங்குவந்து பயின்று பயன் பெற்றுள்ளனர்” என்றார்.

இதுபோன்ற நிகழ்வுகள் சமகால நாகரிகத்தை நிச்சயம் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் என்பதில் ஐயம் ஏதுமில்லை. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!