வெளியிடப்பட்ட நேரம்: 21:53 (17/08/2017)

கடைசி தொடர்பு:21:53 (17/08/2017)

அமெரிக்காவின் ஜீப் இந்தியாவில்! காம்பஸ் எஸ்யூவியில் என்ன ஸ்பெஷல்? #JeepCompass

கிராண்ட் செரோக்கி & ரேங்க்ளர் போன்ற லக்ஸூரி ஆஃப் ரோடர் எஸ்யூவிகளைத் தொடர்ந்து, பிரிமியம் எஸ்யூவி செக்மென்ட்டில், 14.97 லட்சம் - 20.67 லட்சம் (சென்னை எக்ஸ் ஷோரூம்) விலைக்குக் காம்பஸை அறிமுகப்படுத்தியுள்ளது, அமெரிக்க நிறுவனமான ஜீப். காம்பஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல்களில் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும், டீசல் மாடல்களில் 4 வீல் டிரைவ் சிஸ்டமும் ஸ்பெஷல் அம்சமாக வழங்கப்பட்டிருப்பது பெரிய ப்ளஸ். 50-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வசதிகளுடன் கிடைக்கக்கூடிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி பற்றிய தகவல்கள் இதோ...!

ஜீப் காம்பஸ்

ஜீப் நிறுவனம் இந்தியாவில் ஏற்கெனவே கிராண்ட் செரோக்கி மற்றும் ரேங்க்ளர் என இரு பிரிமியம் எஸ்யூவிகளை விற்பனை செய்கிறது என்றாலும், அவை CBU முறையில் இங்கே இறக்குமதி செய்யப்படுகின்றன.  

காம்பஸ்தான் அந்நிறுவனத்தின் முதல் 'Made in India' தயாரிப்பு! எனவே இதில் இருக்கும் 65 சதவிகித உதிரிபாகங்கள், உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டவைதான்! ஃபியட் க்ரைஸ்லர் நிறுவனத்துக்குச் சொந்தமான ரஞ்சன்கவுன் தொழிற்சாலையில், ஃபியட் நிறுவனத்தின் கார்களுடன் சேர்த்து, காம்பஸ் எஸ்யூவியும் தயாரிக்கப்படுகிறது. 

வலதுபக்க ஸ்டீயரிங் செட்-அப் கொண்ட ஜப்பான், தென் ஆப்ரிக்கா, பிரிட்டன் போன்ற உலக நாடுகளுக்கும், ரஞ்சன்கவுனில் இருந்துதான் கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. எனவே இதன் தரத்தைப் பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை! 

interior

ஜீப்பின் இணையதளம் மற்றும் அதன் 50 டீலர்களில், 50 ஆயிரம் ரூபாயைச் செலுத்தி, Sport - Limited - Longitude எனும் பெயரில் இருக்கும் 10 வேரியன்ட்கள் - 5 கலர்கள் - 30 ஆக்ஸசரிஸ்களில் வேண்டியதை, நாம் புக் செய்து கொள்ள முடியும். 

1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் / 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின், 6 ஸ்பீடு மேனுவல் / 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், 2 வீல் டிரைவ் - 4 வீல் டிரைவ் போன்ற பல ஆப்ஷன்களைக் கொண்டிருக்கும் காம்பஸ், மினி கிராண்ட் செரோக்கி போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. 

புக்கிங் துவங்கப்பட்ட மூன்று நாட்களிலேயே, 1,000 புக்கிங்குகளைக் கடந்தது காம்பஸ்! இதுவரை 5,000-க்கும் அதிகமான எண்ணிக்கையில் புக்கிங் மற்றும் 38 ஆயிரத்துக்கும் அதிகமான Enquiry-களைப் பெற்றுள்ளதாக ஜீப் கூறியுள்ளது. மேலும் இதன் டெலிவரிகளும், ஜீப்பின் டீலர்களில் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன.

cabin

காம்பஸில் இருக்கும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் - 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணி, 173bhp பவர் மற்றும் 35kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இதில் 2 வீல் டிரைவ் மாடல் (அராய் மைலேஜ் - 17.1 kmpl) மற்றும் 4 வீல் டிரைவ் மாடல் (அராய் மைலேஜ் - 16.3 kmpl) ஆப்ஷன்கள் இருப்பது கவனிக்கத்தக்கது. 

மற்றோரு இன்ஜின் ஆப்ஷனான 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 162bhp பவர் மற்றும் 25kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு DDCT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன. 

மஹிந்திரா XUV 5OO, டாடா ஹெக்ஸா, ஹூண்டாய் டூஸான், ஃபோக்ஸ்வாகன் டிகுவான் ஆகிய எஸ்யூவிகளுக்குப் போட்டியாகப் பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் காம்பஸ் எஸ்யூவி, 178மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸைக் கொண்டிருக்கிறது.  

jeep compass

ABS, ISOFIX, ESC, EBD, HAC, 6 காற்றுப்பைகள், டிராக்‌ஷன் கன்ட்ரோல், 4 வீல்களுக்கும் டிஸ்க் பிரேக் எனப் பாதுகாப்பு வசதிகளின் பட்டியல் மிக நீளம்; பெட்ரோல் மாடலைத் தொடர்ந்து, டீசலில் 7 ஸ்பீடு DDCT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட வேரியன்ட், டிமாண்டைப் பொறுத்து பின்னர் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Frequency Sensitive Damping உடனான சஸ்பென்ஷன் - Panic Brake Assist உடனான பிரேக்ஸ் - திருப்பங்களில் செல்லும்போது பாடிரோலைத் தவிர்க்கக்கூடிய Electronic Rollover Mitigation வசதி இருப்பதால், மோனோகாக் சேஸியைக் கொண்டிருக்கும் காம்பஸ் எஸ்யூவியின் கையாளுமை அசத்தலாக இருக்கும் எனலாம். 

இந்த எஸ்யூவியின் டாப் வேரியன்ட்களில் Active Drive Selec-Terrain (Auto, Snow, Sand, Mud) சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ - ஆப்பிள் கார் பிளே - 6 ஸ்பீக்கர் உடனான 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 2 ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், LED DRL உடனான Bi-Xenon ஹெட்லைட்ஸ், LED டெயில் லைட்ஸ், அட்ஜெஸ்ட்டபிள் ஸ்டீயரிங் மற்றும் ஓட்டுனர் இருக்கை, 16 இன்ச் அலாய் வீல்கள், பின்பக்க ஏசி வென்ட் எனப்பல சிறப்பம்சங்கள் காரில் இடம்பிடித்துள்ளன. 

suv

15 ஆயிரம் கிமீ / 1 வருடத்துக்கு ஒருமுறை ஃபுல் சர்வீஸ் மற்றும் 3 வருடம் / 1 லட்சம் கிமீ வாரன்டியுடன் கிடைக்கக்கூடிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் சென்னை எக்ஸ் ஷோரூம் விலைகள் பின்வருமாறு;

1.4 MultiAir பெட்ரோல் Sport - ரூ. 14.97 லட்சம்
1.4 MultiAir பெட்ரோல் Limited (AT) - ரூ. 18.72 லட்சம்
1.4 MultiAir பெட்ரோல் Limited (AT) (O) - ரூ. 19.42 லட்சம்


2.0 Multijet டீசல் Sport - ரூ. 15.47 லட்சம்
2.0 Multijet டீசல் Longitude - ரூ. 16.47 லட்சம்
2.0 Multijet டீசல் Longitude (O) - ரூ. 17.27 லட்சம்
2.0 Multijet டீசல் Limited - ரூ. 18.07 லட்சம்
2.0 Multijet டீசல் Limited (O) - ரூ. 18.77 லட்சம்
2.0 Multijet டீசல் Limited 4x4 - ரூ. 19.97 லட்சம்
2.0 Multijet டீசல் Limited 4x4 (O) - ரூ. 20.67 லட்சம் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்