Published:Updated:

அரை சதம் அடித்த மேட்டூர் அணை!

அரை சதம் அடித்த மேட்டூர் அணை!
அரை சதம் அடித்த மேட்டூர் அணை!

தென்மேற்குப் பருவமழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டியுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, கர்நாடகாவில் உள்ள அணைகளிலிருந்து அதிக அளவு உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 51 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வறட்சியின் காரணமாகக் குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில், வளிமண்டலத்தின் மேலடுக்குச் சுழற்சியின் காரணமாகப் பெய்யும் மழையாலும் தீவிரமடைந்துவரும் தென்மேற்குப் பருவமழையாலும் கர்நாடகா பகுதி அணைகளில் நீர் நிரம்பிக் காணப்படுகிறது. இதையடுத்து, கர்நாடகாவின் கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணையிலிருந்து அதிகப்படியான உபரிநீர் திறந்துவிடப்படுவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துவருகிறது. 

தற்போது, 10 மாதங்களுக்குப் பின்னர் 50 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ள மேட்டூர் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 21,947 கன அடியாக அதிகரித்துக் காணப்படுகிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணையின் வறட்சி மறைந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு