வெளியிடப்பட்ட நேரம்: 08:07 (19/08/2017)

கடைசி தொடர்பு:08:34 (19/08/2017)

பெண் போலீஸ்களுக்கு 159 ஸ்கூட்டர்கள் பரிசு! ஹீரோ கம்பெனியின் தாராளம்! #Scooters

தமிழ்நாட்டில் கொஞ்ச ஆண்டுகளுக்கு முன்பு சில ஆண் போலீஸ்களுக்கு அப்பாச்சி  பைக் வழங்கினார்கள். அதற்குப் பிறகு, எந்த வாகன நிறுவனத்திடமிருந்தும் இப்படி ஒரு  ஆஃபர் வரவே இல்லை. அந்தச் சமயத்திலேயே பெண் கான்ஸ்டபிள்களுக்கும் ஸ்கூட்டர் வழங்கலாமே என்ற பேச்சு அடிபட்டதாகச் சொன்னார்கள். நம் ஊரில் பேச்சு - பேச்சாகவே இருக்க, தெலங்கானாவில் இதை நடைமுறைப்படுத்திவிட்டார்கள். அங்கு உள்ள சில முக்கியமான காவல் நிலையங்களில் சில துறுதுறு பெண் கான்ஸ்டபிள்களுக்கு, ஹீரோ நிறுவனத்தின் ப்ளெஷர், டூயட் போன்ற லைட் வெயிட் ஸ்கூட்டர்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன. 

scooter

இந்த ஸ்கூட்டர்கள், பெண்கள் எளிதில் ஹேண்ட்லிங் செய்யக்கூடிய வகையில் பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்டுள்ளதாம். சைரன், டிராஃபிக் லைட்டுகள், நேவிகேஷன் சிஸ்டம், PA என்னும் பப்ளிக் அட்ரெஸ் சிஸ்டம் என்று பல வசதிகளுடன் தயாராகியுள்ளன. 

அண்மைக்காலமாக, பெண்கள் பாதுகாப்புக்கு தெலங்கானா மாநிலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறதாம். பெண்கள் பாதுகாப்புக்கு என்றே ‘SheTeam’ என்றொரு குழுவையும் உருவாக்கியுள்ளது தெலங்கானா காவல்துறை. பெண்களுக்கு எதிராக நடக்கும் டீஸிங்குகளின்போது, பெண் போலீஸ்களுக்கு கம்ப்ளெய்ன்ட் வந்து அந்த இடத்தைச் சென்றடைவதற்குள் ரோமியோக்கள் தப்பித்துவிடுகிறார்களாம். இதற்காக ‘SheTeam’ குழுவினருக்கு இந்த ஹீரோ ஸ்கூட்டர்கள் பரிசாகக் கிடைத்துள்ளன. இந்த ஸ்கூட்டர் வழங்கும் விழாவில் தெலங்கானா கமிஷனர், ஹைதராபாத் கமிஷனர், ஹீரோ மோட்டோ கார்ப்பின் விஜய் சேத்தி, ஐபிஎஸ் மஹேந்தர் ரெட்டி மற்றும் பல காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.

``தெலங்கானா மாநில காவல்துறை, பெண்கள் பாதுகாப்புக்காக எடுத்துவரும் பல நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது. டிராஃபிக்கிலும் அவர்கள் கவனம் செலுத்துவது எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. இந்தியாவில் நாங்கள் ஏகப்பட்ட மாநிலங்களுடன் பார்ட்னர்ஷிப் வைத்துள்ளோம். இப்போது, தெலங்கானா. தெலங்கானாவில், பெண்கள் முன்னேற்றத்துக்காக சிறிய அளவில் உதவுவதில் ஹீரோ மிகவும் மகிழ்ச்சியடைகிறது’’ என்று மொத்தம் 159 ஸ்கூட்டர்களின் சாவியை போலீஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார் விஜய் சேத்தி.

70 ஸ்கூட்டர்கள் ஹைதராபாத்துக்கு, 50 ஸ்கூட்டர்கள் சைபராபாத்துக்கு, 39 ஸ்கூட்டர் ரச்சகொண்டா என்னும் இடத்துக்கு என்று மொத்தம் 159 ஸ்கூட்டர்கள் ஏரியாவாரியாக அப்போதே பிரித்துத் தரப்பட்டன. இப்போது ஆந்திரா போலீஸ் பெண்களுக்கு ஸ்கூட்டர் ஓட்டும் பயிற்சி கொடுக்கப்பட்டு, ‘வ்வ்வ்ர்ர்ரூம்’ என ஆந்திரா வீதிகளில் பேட்ரோல் வருகிறார்கள் பெண் போலீஸார். 

ஹீரோ, பார்ட்னர்ஷிப் வைத்துள்ள அந்த ஏகப்பட்ட மாநிலங்களின் லிஸ்ட் இது. டெல்லி, ஹைதராபாத், உத்தர்கண்ட், ஹரியானா, ரூர்கேலா, லக்னோ, நாக்பூர். மேலும், இந்த மாநிலங்களின் டிராஃபிக் சிக்கலையும் தீர்த்துவைக்கிறதாம் ஹீரோ!  ஏற்கெனவே ஹரியானா மாநிலத்துக்கு 100 ஸ்கூட்டர்கள், உத்தர்கண்டுக்கு 250 ஸ்கூட்டர்கள் என்று பெண் போலீஸுக்கு ஏற்கெனவே பல வாகனங்களை விநியோகம் செய்துள்ளது ஹீரோ.

தமிழ்நாட்டுக்கு எப்போண்ணா வருவீங்க?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்