Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆன்லைனில் ஷாப்பிங் செய்வோர் உஷாராக கவனிக்கவேண்டிய விஷயங்கள்! #SafeOnlineShopping

இணைய காலமாகிவிட்ட இன்றைய பரபரப்பான ஓட்டத்தில் நேரம் ஒதுக்கி, நேரில் சென்று நிதானமாகப் பொருள்களை வாங்கும் பொறுமை இருப்பதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு ஆன்லைன் ஷாப்பிங்கே பெஸ்ட் சாய்ஸாக இருக்கிறது. புக் பண்ணினோமா... வாசல் தேடி வந்ததும் வாங்கிப்போட்டோமா என்றே இருக்கிறார்கள். ஆனால், இந்த ஆன்லைன் ஷாப்பிங்கில் பாசிட்டிவ், நெகட்டிவ் என இரண்டு முகங்கள் இருக்கின்றன. அதைச் சரியாகப் புரிந்துவைத்திருப்பது முக்கியம். 

online shopping

இன்றைய காலகட்டத்தில், சோஷியல் ஷாப்பிங் என்பது வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. “ஆன்லைன் ஷாப்பிங் தெரியும், அதென்ன சோஷியல் ஷாப்பிங்?” எனப் யோசிக்கிறீங்களா? அது ஒண்ணுமில்லே... நீங்க யூஸ் பண்ணும் சோஷியல் மீடியாவில் விளம்பரமாக வருகிற புராடக்ட்டுகளைப் பார்த்து சொக்கிப்போய், சொக்கிய வேகத்தில் க்ளிக் பண்ணி பர்சேஸ் பண்ணுவீங்களே, அதுதான் சோஷியல் ஷாப்பிங். இதுக்குதான் மக்கா, இப்போ பக்கா மவுசு. 'இப்படி ஆன்லைனில் பொருள்களை வாங்குறதில்தான் நிறைய ப்ராப்ளம் இருக்கே... அப்புறமும் ஏன் மக்கள் விரும்புறாங்க'ன்னு குழப்பத்தோடு, தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பிரியாகிட்ட கேட்டேன். 

“நான் நிறைய புராடக்ட்களை ஆன்லைனில்தான் பர்சேஸ் பண்ணியிருக்கேன். அலைச்சல் இல்லாமல், ஈஸியா ஒரே இடத்திலிருந்து நமக்குத் தேவையானவை கிடைச்சுடும். மத்த சைட்டோடு கம்பேர் பண்ணி நமக்கு சாதகமானதை செலெக்ட் பண்ண முடியும். இதுவே நேரில் ஷாப்பிங் பண்ணக் கிளம்பினால், ரெண்டு கடைகள் ஏறி இறங்கணும். அங்கேயும் இருக்கிறதைத்தான் செலெக்ட் பண்ணணும். ஆன்லைன்ல தொடர்ச்சியா ஒரே சைட்ல நாம பர்சேஸ் பண்ணும்போது கேஷ்பேக் கிடைக்கும், ஃப்ரீ கூப்பன் கிடைக்கும். அதை வெச்சும் தேவையானதை வாங்கிக்கலாம். முக்கியமா, ஒரு புராடக்ட்டைப் பிடிக்கலைனா ரிட்டர்ன் பண்ணிடலாம். நேரில் இந்த மாதிரி வாங்கிக்க மாட்டாங்க. இப்படி பல விஷயங்கள் இருக்கு. குர்த்தி, கிட்ஸ் அயிட்டம்ஸ், வீட்டுக்குத் தேவையான பொருள்கள் எனப் பலவற்றையும் ஆன்லைன்மூலமே பர்சேஸ் பண்றேன். அதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு'' என்கிறார் கூலாக.

அதே கேள்விக்கு பதில் அளிக்கும் குடும்பத் தலைவி அபிராமி, ''ரொம்ப அலையாமல் வீட்டிலிருந்தே பல புராடக்ட்டுகளைப் பிடிச்ச மாதிரி வாங்கலாம். வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும், பொருள்கள் வாங்கறதுக்காக மறுபடி கடைக்குக் கிளம்பறது கஷ்டமாவும் களைப்பாகவும் இருக்கு. அதுக்கு ஆன்லைன் பெஸ்ட் சாய்ஸா இருந்ததால் அதில் இறங்கிட்டேன். குழந்தையை வெச்சுக்கிட்டு கடை கடையாக ஏறி பொருள்களைப் பார்த்து வாங்கறது, பெரிய சவால். குழந்தை திடீர்னு அழுது அடம்பிடிக்க ஆரம்பிச்சிட்டா, எதிலும் கவனம் செலுத்த முடியாது. அதனால், குழந்தைக்கு, எனக்கு, கணவருக்கு என எல்லாவற்றையும் ஆன்லைனில்தான் வாங்கறோம். சீப் அண்ட் பெஸ்டா விஷயம் முடியும்போது அப்படி நடந்துக்கிறதுதானே புத்திசாலித்தனம்'' என்கிறார் கெத்தாக.

 

ரிவ்யூ படித்தே புராடக்ட்டுகளைத் தீர்மானிக்கும் குடும்பத் தலைவியான கங்கா, “ஒரு புராடக்ட் வாங்கலாம்னு முடிவு செஞ்சுட்டா, அந்த சைட்ல கஸ்டமர்ஸ் கொடுத்திருக்கும் ரிவ்யூவை முழுசாப் படிப்பேன். அதைவெச்சு வாங்கலாமா வேண்டாமானு முடிவுக்கு வந்துடலாம். இதுவே கடைக்குப்போனால், அவங்க சொல்றதைத்தான் நம்பணும். அது நல்லா இல்லாமலும் இருக்கலாம். அதனால், ஆன்லைன் ஷாப்பிங்கே எனக்கு சௌகரியமா இருக்கு'' என்கிறார். 

ஒரு வகையில் இவர்கள் சொல்வது நியாயமாக இருக்கலாம். ஆனால், இப்படிப்பட்டவர்கள் ஒரு விஷயத்தை மறந்துவிடக்கூடாது. அது, உங்களுடைய பிரைவஸி, வேறு பலரின் கைகளுக்குச் சென்றுகொண்டிருக்கிறது என்பதுதான். தவிர, எப்போதும் ஆன்லைலைப் பார்த்துப் பார்த்து ஷாப்பிங் செய்பவர்கள், ஆன்யோமேனியா (Onyomania) என்ற அடிமைத்தனத்துக்கு ஆளாகிறார்கள்.

இத்தகையவர்கள் நாளடைவில், தள்ளுபடியில் கிடைக்கிறதே என்று தேவையற்ற பொருள்களையும் வாங்கிக் குவிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். எனவே, ஆன்லைன் ஷாப் பண்றதுக்கு முன்னாடி, இந்த விஷயங்களில் கவனமா இருங்க. 

1. முதல்ல, உங்களுக்கு அந்த புராடக்ட் மேலே முழு நம்பிக்கை வரணும். அப்படி வரலைன்னா அதை வாங்காமல் இருக்கிறதே நல்லது. ஏன்னா, அப்படி வாங்கிட்ட பொருளை உங்களால் திருப்தியோடு பயன்படுத்த முடியாது.

2. பாதுகாப்பான இடங்கள்மூலமாக ஆன்லைன் ஷாப்பிங் செய்யணும். ப்ரௌசிங் சென்டரில் நீங்கள் பொருள்களை பர்சேஸ் செய்துவிட்டு, உங்க அக்கவுன்ட் டீட்டைல்ஸை குளோஸ் செய்யாமல் போயிட்டீங்கன்னா, அது மத்தவங்களுக்கு அமுதசுரபியாக மாறிடும்.

3. ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது, அவர்கள் சொல்கிற டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் எல்லாத்தையும் நிதானமாக வாசிச்சுப் பார்த்து ஷாப்பிங் செய்யணும்.

4. ஒருவேளை நீங்கள் தேடின பொருள் இல்லைன்னா யோசிக்காமல் வெளியே வந்துடுங்க. தயங்கி நின்றால், வேறு பொருள்களைப் காண்பிச்சு வாங்க வெச்சுடுவாங்க.

5. ஒருமுறைக்குப் பலமுறை பல சைட்களில் அந்தப் பொருளின் விலையைப் பார்த்துக்கறது பெட்டர். வேறு சைட்டில் விலை குறைவாக இருந்தால், அங்கேயே வாங்கலாம்.

6. ஒருவேளை உங்கள் கார்டை வேறு ஒருவர் பயன்படுத்துறது தெரிஞ்சா, உடனடியாக அதற்கான புகார் நிலையத்தில் பதிவுசெஞ்சு திருட்டைத் தடுக்கணும்.

7. எப்போ பர்சேஸ் முடிச்சாலும், அக்கவுன்ட்டை லாக்அவுட் செய்ய மறக்கவே மறக்காதீங்க. லாக் அவுட் பண்ணிட்டோமான்னு செக் பண்ணிக்கங்க.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement