வெளியிடப்பட்ட நேரம்: 21:12 (22/08/2017)

கடைசி தொடர்பு:21:12 (22/08/2017)

கொரியன் படங்களை மிஞ்சும் ட்விஸ்ட்டுகள், ஹாலிவுட்டை மிஞ்சும் திரைக்கதை - அதிமுக அட்ராசிட்டீஸ்!

மிழ்நாடுதான் தற்போது இந்தியா முழுவதும் ஹாட் டாபிக். காரணம், தமிழகத்தின் நடக்கும் அரசியல் மாற்றங்கள் (அ)  அட்ராஸிட்டிகள். அதில் அதிமுகவுக்கு பெரும்பங்குண்டு. ஆரம்பத்திலிருந்து இன்று வரை என்ன ஆனது? ஒரு சின்ன தொகுப்பு!

* தமிழ்நாடு பல அரசியல் தலைவர்களைக் கண்டிருந்தாலும் மக்கள் மனதில் கிங் சைஸ் சோபா போட்டு உட்கார்ந்தவர்கள் கருணாநிதியும், எம்.ஜி.ஆரும்தான். அதிமுகவில் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் கட்சியின் நிலை என்ன என்று கேள்வி எழுந்த போது, 'கன்னும் என்னதுதான் பொண்ணும் என்னதுதான்...' என்ற தொனியில் 'கட்சியும் என்னதுதான், சின்னமும் என்னதுதான்' என்று போக்கிரி பி.ஜி.எம்மை போட்டு விஸ்வரூபம் எடுத்த ஜெ இறுதியில் வெற்றியும் பெற்றார். எம்.ஜி.ஆரால் 'அம்மு' என்றழைக்கப்பட்ட ஜெ, தமிழக மக்களால் 'அம்மா' என்று அழைக்கப்பட்டார். 

* ஜெயலலிதா உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டதில் ஆரம்பித்து, இன்றைய தினம் வரை அதிமுகவில் நடந்து வரும் அதகள அட்ராஸிட்டிக்கு அளவேயில்லை. தமிழக முதல்வருக்கு என்னாச்சோ? ஏதாச்சோ? என்று தமிழகமே பதறிக்கொண்டிருக்க, இந்த அமைச்சர்கள் கொடுத்த பேட்டிகள் இருக்கே... ''அம்மா இட்லி சாப்பிட்டாங்க, உப்புமா சாப்பிட்டாங்க, வாக்கிங் போறாங்க''னு இவங்க சொன்னது எல்லாத்தையும் வேற வழியில்லாம தமிழக மக்களும் நம்புனாங்க. தினம் தினம் அப்போலோ வாசல் வரைக்கும் வந்து பார்த்து ஏமாந்து வீடு போய் சேர்ந்தாங்க. காரணம், சசிகலா ஆர்மிதான். 

அதிமுக

* சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெ சிறைக்குப் போன பிறகு கைக்குட்டை நனைய கதறி அழுத நம் அமைச்சர்கள், அவர் இறந்த பின் கொடுத்த ரியாக்‌ஷன்கள் செம வைரல் ஆனது. ஓ.பி.எஸ் தலைமையில் ஆட்சி நடக்க, திடீரென சசிகலா உள்ளே புகுந்து அடுத்த அம்மா இல்லேனாலும் ஒரு சின்னம்மாவாது ஆகுறேன்னு ஷாக் கொடுத்தார். 'இது என்னடா தமிழ்நாட்டு மக்களுக்கு வந்த சோதனை'னு மக்கள் புலம்பிக் கொண்டிருக்க, ஓ.பி.எஸ் மெரினாவில் தியானம் பண்ணது என்ன, தீபா லோக்கல் மீடியாவுல இருந்து நேஷனல் மீடியா வரைக்கும் பேட்டி கொடுத்தது என்ன, கூவத்தூரில் கூத்து நடந்தது என்ன, டிடிவியின் என்ட்ரி என்ன... முடியல சாமி' என்று தமிழ்நாட்டு மக்கள் தத்தளித்துக் கொண்டிருந்தனர். இதற்கிடையில் எடப்பாடிக்கு அடித்தது ஜாக்பாட். பரிசாக சி.எம் பதவி விழுந்தது. 'அட இவரு யாரு புதுசா இருக்காரே?'னு கூகுளை நோக்கி தேடல்கள் அனல் பறந்தது. 

* அதன் பின்னர் அந்த சூழலும் நிலைத்து நிற்கவில்லை. தினமும் காலையில் கண் விழிக்கும்போது இன்று என்ன நடக்குமோ? என்ற குழப்பத்தில் இருந்த மக்களுக்கு மேலும் ஒரு காரசார டாப்பிக் கிடைத்தது. அதுதான் சசிகலாவின் கைது, டி.டி.வியின் கைது. அதிமுக நமக்குத்தான் என்று யார் யாரோ நினைத்துக் கொண்டிருக்க... 60 நாள் பெயிலில் வெளியே வந்து, 'என்னடா நடக்குது இங்க நான் வெளியில வந்துட்டேன்' என்ற ரகத்ததில் ரீ-என்ட்ரி கொடுத்தார் டி.டி.வி. ஒருபக்கம் ஓ.பி.எஸ் தினகரனோடு கூட்டு வைக்க நிபந்தனைகள் விதிக்க, மறுபக்கம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என எடப்பாடி தனியாக விழா எடுக்க... ஸ்ஸப்பா! 'கட்சியை இப்படி சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே' என்று பரிதாபத்தோடு பார்த்தார்கள் அதிமுக தொண்டர்கள். 

பன்னீர் செல்வம், பழனிச்சாமி

* இறுதி கட்டமாக எடப்பாடி அரசை கவிழ்த்துவிட 'ஊழல் அரசு' என்ற ஆயுதத்தை கையில் எடுத்தது பன்னீர் அணி. இப்படி உக்கிரமாக மோதிக்கொண்ட பழனிச்சாமியும், பன்னீர் செல்வமும் சேர மாட்டார்கள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்க, திடீர் ட்விஸ்ட்டாய் இருவரும் கைகோர்த்தார்கள். இந்தக் கூத்துகளால் இனி வருங்காலங்களில் எந்த ட்விஸ்டுகளுக்கும் மக்கள் அசரமாட்டார்கள் போல. அதுவே பழகிடுச்சுல! 

'தர்மயுத்தம்... போர்... ஆமாம் போர்' என்று கொதித்த பன்னீரின் கையில் துணை முதல்வர் என்ற பதவியைக் கொடுத்து 'நீங்க ஷட் அப் பண்ணுங்க' என சொல்லிவிட்டது எடப்பாடி க்ரூப். இந்த திரைக்கதைக்கு இயக்குநரான மோடிக்கு ஆஸ்கரே கொடுக்கலாம். வாவ் ஜி!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்