Published:Updated:

`மதம் வேற, மனுஷன் வேற இல்லையா?' -இந்து வளர்ப்புப் பெண்ணுக்கு திருமணம் செய்துவைத்த இஸ்லாமியத் தம்பதி

அப்துல்லா, கதீஜாவுடன் மணமக்கள்
News
அப்துல்லா, கதீஜாவுடன் மணமக்கள்

கேரள மாநிலம், காசர்கோடில் உள்ள பகவதி அம்மன் கோயிலில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்துக்களின் கூட்டத்துக்கு இணையாக இஸ்லாமியர்களின் கூட்டத்தையும் அதிகமாகக் காணமுடிந்தது. அது, ஒற்றுமையைப் பறைசாற்றிய கூட்டம்.

கேரளாவில், கடந்த மாதம் இந்துப் பெண்ணுக்கு இந்து முறைப்படி மசூதியில் நடந்த திருமணம், நாடு முழுவதும் தனி கவனத்தை ஈர்த்தது. தற்போது, பிப்ரவரி மாதம் மற்றோர் ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்கிறது கடவுளின் தேசம். கேரள மாநிலம், காசர்கோடில் உள்ள பகவதி அம்மன் கோயிலில், ஞாயிற்றுக்கிழமை அன்று, இந்துக்களின் கூட்டத்துக்கு இணையாக இஸ்லாமியர்களின் கூட்டத்தையும் அதிகமாகக் காணமுடிந்தது.

மசூதியில் நடந்த திருமணம்
மசூதியில் நடந்த திருமணம்

அது ஒற்றுமையைப் பறைசாற்றிய கூட்டம். அப்துல்லா, கதீஜா என்ற இஸ்லாமியத் தம்பதியினர், தங்களின் வளர்ப்பு மகளான ராஜேஸ்வரிக்கு, இந்து முறைப்படி திருமணம் நடத்தி வைத்துள்ளனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ராஜேஸ்வரி தஞ்சாவூர்க்காரர். சிறு வயதிலேயே தாய்-தந்தையை இழந்தவர். ராஜேஸ்வரியின் தந்தை, அப்துல்லாவின் பண்ணையில் பணியாற்றும்போது இறந்துவிட்டார். இதையடுத்து, சில நாள்கள் தஞ்சைக்குச் சென்ற ராஜேஸ்வரி, பின்பு மீண்டும் காசர்கோட்டில் உள்ள அப்துல்லாவின் வீட்டுக்கே வந்துவிட்டார்.

காசர்கோடு திருமணம்
காசர்கோடு திருமணம்

அப்போதிலிருந்து ராஜேஸ்வரியை தத்தெடுத்து வளர்த்த அப்துல்லா-கதீஜா தம்பதியினர், அவருக்குத் திருமணமும் செய்து வைத்து ஆசீர்வாதம் செய்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து அப்துல்லா, ``10 வயசிலேருந்து ராஜேஸ்வரி எங்க கூடதான் இருக்கா. எங்களுக்கு ஏற்கெனவே மூணு பசங்க இருக்காங்க. வீட்ல பொண்ணு இல்லாத குறையை ராஜேஸ்வரி தீர்த்துட்டா. நான் துபாய்ல வேலைபார்த்துட்டு இருந்தேன். எப்பல்லாம் ஊருக்கு வர்றேனோ, அப்பல்லாம் ராஜேஸ்வரிக்கு சிறப்பு கவனிப்புதான். அவள வேற வீட்டுப் பொண்ணா நாங்க பாக்கல. அதே நேரத்துல, அவளோட நம்பிக்கையிலும் நாங்க தலையிடலை. அவளுக்குப் பிடிச்ச மாதிரிதான் வளர்ந்தா. கல்யாண விஷயத்துல மட்டும் நான் கொஞ்சம் கறாரா இருந்தேன்.

விஷ்ணு பிரசாத், ராஜேஸ்வரி
விஷ்ணு பிரசாத், ராஜேஸ்வரி

எந்தக் காரணத்துக்காகவும் குடிப்பழக்கம் இருக்கறவங்களுக்கு பொண்ணக் கொடுக்கக்கூடாதுனு உறுதியா இருந்தேன். அதுக்காகவே ரெண்டு வரன்களை வேண்டாம்னு சொல்லிட்டேன். அப்பறம்தான் விஷ்ணுபிரசாத் குடும்பம் அறிமுகமானாங்க. அவங்க விருப்பத்தைச் சொன்னதும், ரெண்டு வீட்டுக்காரங்களும் கலந்து பேசினோம். எங்களுக்கு ரொம்பப் பிடிச்சுது. ராஜேஸ்வரிக்கும் பையனை ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. கல்யாணம் வெச்சுட்டோம். எல்லாரும் ஆசைப்பட்ட மாதிரியே கோயில்ல வெச்சு கல்யாணம் பண்ணிட்டோம். இது எங்க கடமை. மதம் வேற மனுஷன் வேற. இல்லையா? எல்லா மதத்துலயும் நல்லதும் இருக்கு, கெட்டதும் இருக்கு. மனுஷங்கதான் முக்கியம்” என்று புன்னகைத்தார்.

``பெண் குழந்தை வேணும்னு ரொம்பவே ஆசை. ஆனா, எங்களுக்குப் பொறந்த மூணும் ஆம்பள பசங்க. அந்தக் குறை மனசுல ஒரு ஓரமா இருந்துச்சு. ராஜேஸ்வரி வந்தப்பறம், அது போயிடுச்சு. எங்க வீட்ல ஒருத்தியாதான் அவள வளர்த்தோம். எங்க எல்லாருக்குமே அவள ரொம்பப் பிடிக்கும். எங்களோட எல்லா உறவினர்களுக்குமே ராஜேஸ்வரி மேல பாசம் அதிகம். அதனாலதான், கல்யாணத்துக்கு எங்க உறவினர்களும் வந்திருந்தாங்க.

ஆசீர்வாதம் பெறும் மணமக்கள்
ஆசீர்வாதம் பெறும் மணமக்கள்

அவளுக்குக் கல்யாணம் ஆனது ரொம்ப சந்தோஷம். அவ வீட்ல இருக்கிறப்ப, வீடே கலகலப்பா இருக்கும். இப்ப அவ இல்லாததால வீடே வெறிச்சோடி இருக்கு. அவள விட்டு நான் பிரிஞ்சதே இல்ல. அது மட்டும் கொஞ்சம் கஷ்டமா இருக்கு” என்கிறார் கதீஜா.

கல்யாணப் பெண்ணான ராஜேஸ்வரியிடம் பேசினோம், ``தஞ்சாவூருக்கு போகப் பிடிக்கலை. அதனால, இங்கயே தங்கிட்டேன். எனக்கு அது வேற ஒருத்தங்க வீடுங்கற நினைப்பு எப்பவும் வந்ததில்ல. அவங்க அந்த மாதிரி நடந்துக்கவும் மாட்டாங்க. எனக்கு நினைவு தெரிஞ்சதுலருந்து அவங்கள அப்பா, அம்மானுதான் கூப்டுட்டு இருக்கேன். அவங்க பசங்க எல்லாம் வயசுல பெரியவங்க. கூட ஒரு சகோதரி இல்லைங்கிறதால, என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாங்க. நான் என்னோட இஷ்டப்படிதான் வளர்ந்தேன். எந்த விஷயத்துலயும் அவங்க குறுக்கே நின்னதில்ல. கல்யாணம், நாங்க எதிர்பார்த்ததவிட ரொம்ப நல்லாவே நடந்திருக்கு. அது இன்னும் சந்தோஷமா இருக்கு.

விஷ்ணு பிரசாத், ராஜேஸ்வரி
விஷ்ணு பிரசாத், ராஜேஸ்வரி

ஆனா, அப்பா-அம்மாவ விட்டு இருக்கறது மனசுக்கு கஷ்டமா இருக்கு. என்னைப் பிரிஞ்சிருக்கிறதை நினைச்சு அம்மா அழுதுட்டே இருக்காங்க. என்னாலயும் அழுகைய நிறுத்த முடியல. அவங்ககூட வீடியோ கால்ல பேசிட்டே இருக்கேன். நேத்துகூட வீட்டுக்குப் போய் அவங்கள பார்த்துட்டு வந்தேன். நான் வர்றேன்னு தெரிஞ்சதும், அவங்க சொந்தக்காரங்களும் வீட்டுக்கு வந்துட்டாங்க. மனசு சரியா இருந்தா போதும். எந்தப் பிரச்னையும் வராது” என்றார்.

ராஜேஸ்வரியின் கணவர் விஷ்ணு பிரசாத், ``நான் மெடிக்கல் துறையில வேலை பார்த்துட்டு இருக்கேன். சமூகப் பணிகள்லயும் ஆர்வம் அதிகம். என்னோட நண்பர் மூலமா ராஜேஸ்வரி பத்தி தெரிய வந்துச்சு. அப்பவே அவங்கள எனக்கு ரொம்பப் பிடிச்சிருச்சு. எங்க குடும்பத்தினர் மூலம், முறைப்படி அவங்க வீட்ல போய் பேசினோம்.

விஷ்ணு பிரசாத், ராஜேஸ்வரி
விஷ்ணு பிரசாத், ராஜேஸ்வரி

கல்யாணமும் நல்லபடியா நடந்திருக்கு. ஆசைப்பட்ட பொண்ணையே கல்யாணம் பண்ணியாச்சு. நிறைய இடங்கள்ல இருந்து வாழ்த்துகள் குவிஞ்சுட்டு இருக்கு. மனசு ரொம்ப நிறைவா இருக்கு சாரே” என்று முடித்தார்.