Published:Updated:

ஆஷிர்வாத் ஆட்டாவில் எவ்ளோ ஸ்நாக்ஸ் செய்யலாம் தெரியுமா!

ஆஷிர்வாத் ஆட்டா

குழந்தைகள் திடீர்னு பசிக்குதுன்னு சொல்வாங்க, இல்லைன்னா திடீர்னு வீட்டுக்கு விருந்தாளி வருவாங்க, ஆனா அந்த நேரம் பார்த்து அவங்களுக்குக் கொடுக்க ஸ்நாக்ஸ் எதுவுமே இருக்காது. இனி இந்த மாதிரி நேரங்கள்ல என்ன செய்றதுன்னு குழம்பி நிற்க வேண்டாம்!

ஆஷிர்வாத் ஆட்டாவில் எவ்ளோ ஸ்நாக்ஸ் செய்யலாம் தெரியுமா!

குழந்தைகள் திடீர்னு பசிக்குதுன்னு சொல்வாங்க, இல்லைன்னா திடீர்னு வீட்டுக்கு விருந்தாளி வருவாங்க, ஆனா அந்த நேரம் பார்த்து அவங்களுக்குக் கொடுக்க ஸ்நாக்ஸ் எதுவுமே இருக்காது. இனி இந்த மாதிரி நேரங்கள்ல என்ன செய்றதுன்னு குழம்பி நிற்க வேண்டாம்!

Published:Updated:
ஆஷிர்வாத் ஆட்டா

ஆஷீர்வாத் கோதுமை மாவில் தோசை, முறுக்கு, சேமியா, அடை'னு விதவிதமான, சுவையான, சுலபமான பல பண்டங்களைத் தயார் செய்ய முடியும்ன்னு நாங்க சொன்னா நம்புவீங்களா?

ஆமாம், இனிமே நீங்க உங்க குடும்பத்தினருக்கு பிடிச்ச உணவுகளை உடனடியா செய்து கொடுக்கலாம்! கோதுமை அடை, கோதுமை முறுக்கு, கோதுமை அல்வா - இவற்றின் படிப்படியான செய்முறைகளை உங்களுக்காக வழங்கியிருக்கோம். ஆஷிர்வாத் ஆட்டாவுடன் உங்களின் சுவைப் பயணத்தை தொடங்குங்க!

கோதுமை மாவு அடை

2 பேருக்கு, தேவையான பொருள்கள்:

ஆஷீர்வாத் முழு கோதுமை மாவு – 1 ½ கப்

வெங்காயம், பொடியாக நறுக்கியது – 1

கரம் மசாலா – ¼ தேக்கரண்டி

மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி

உப்பு – ருசிக்கேற்ப

தண்ணீர்

செய்முறை:

1. பொடியாக நறுக்கிய வெங்காயம், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் கரிவேப்பிலையை மாவுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

2. தண்ணீர் சேர்த்து மிருதுவான மாவாகப் பிசைந்து, ஆறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

3. மேடை மீது ஒரு பாலித்தீன் தாளை விரித்து அதில் சிறிது எண்ணெய் தடவவும். அதன் மேல் மாவு உருண்டைகளை வைத்து, ரொட்டியை விடச் சிறிது தடிமனான அடைகளாக கையால் தட்டிக் கொள்ளவும்.

4. தோசைக்கல்லைச் சூடாக்கி எண்ணெய் தடவிக்கொள்ளவும். தட்டிய அடையை மிதமான தீயில் இரண்டு பக்கமும் பொன்னிறமான புள்ளிகள் தோன்றும் வரை கல்லில் போட்டு நன்றாக சுட்டு எடுக்கவும்.

இந்த முழு கோதுமை மாவு அடையை, சுடச்சுட எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஸாஸ் அல்லது சட்னியுடன் சாப்பிட்டு மகிழுங்க!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கோதுமை முறுக்கு

தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு – 1 கப்

மிளகாய்த் தூள் – ½ தேக்கரண்டி

வெள்ளை எள் – ½ தேக்கரண்டி

வெண்ணெய் – ½ தேக்கரண்டி

பெருங்காயத்தூள் – ⅛ தேக்கரண்டி

உப்பு – ருசிக்கேற்ப

எண்ணெய் – பொரித்தெடுக்க

தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

1. கோதுமை மாவை அளந்தெடுத்து, ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் கொட்டவும். மாவு ஈரமாவதைத் தடுக்க துணியின் ஓரங்களை சேர்த்து முடிச்சு போடவும். ஒரு இட்லி சட்டி/குக்கரில் நீர் ஊற்றி, துணி மூட்டையை இட்லி தட்டின் மீது வைத்து மூடியால் மூடி, குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும்.

2. 20 நிமிடங்களுக்குப் பிறகு, கை பொறுக்கும் சூடு வந்ததும் மூட்டையை திறந்து ஒரு ஸ்பூனால் அந்தக் கட்டியை உதிர்க்கவும். பின்னர் அந்த மாவை சல்லடையால் சலித்துக்கொள்ளவும்.

3. மாவை ஓர் அகலமான பாத்திரத்திலிட்டு, மிளகாய்த்தூள், வெண்ணெய், பெருங்காயம், எள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கையால் நன்றாகக் கலக்கவும்.

4. பின்னர் சிறிது சிறிதாக நீர் சேர்த்து பாத்திரத்தில் ஒட்டாத மாவாக பிசைந்துகொள்ளவும். முறுக்கு அச்சில் எண்ணெய் தடவிக்கொள்ளவும்.

5. முறுக்கு அச்சில் மாவை அழுத்தமாக நிரப்பி, எண்ணெயில் முறுக்குகளாக இட்டுக்கொள்ளவும்.

6. முறுக்கை பொன்னிறமாகும் வரை பொரித்து, டிஷ்யு பேப்பர் மீதிட்டு எண்ணெயை நீக்கவும். மாவு முழுவதையும் இவ்வாறு முறுக்குகளாக தயாரிக்கவும்.

குடும்பத்தில் எல்லாருக்கும் பிடிக்கக்கூடிய இந்த மொறுமொறு கோதுமை மாவு முறுக்குகளை மாலை நேரத்தில் வெறுமனே அல்லது சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டு மகிழுங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோதுமை அல்வா

தேவையான பொருள்கள்:

ஆஷீர்வாத் ஆட்டா – 2 கப்

சர்க்கரை – 1 ¼ கப்

முந்திரி – 2 மேஜைக்கரண்டி

திராட்சை – 1 மேஜைக்கரண்டி

ஏலக்காய் பொடி – ½ தேக்கரண்டி

நெய் – 1 ½ கப்

செய்முறை:

1. சூடான வாணலியில் ஒரு கப் நெய் சேர்க்கவும். அதனுடன் ஆஷீர்வாத் சுப்பீரியர் எம்.பி கோதுமை மாவு சேர்க்கவும். கரண்டி கொண்டு மாவையும், நெய்யையும் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

2. சிறிது நேரம் கழித்து, மீதமுள்ள அரை கப் நெய்யைச் சேர்த்து கலக்கவும். அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து, மாவில் கட்டிகள் வராத வண்ணம் கிளறி, மாவு மிருதுவாகும் வரை வறுக்கவும்.

3. இப்போது தண்ணீரையும் சர்க்கரையையும் சேர்த்து பதமாகக் கலக்குங்கள். கலவை இளம் பழுப்பு நிறத்திலிருந்து அடர்ந்த பழுப்பு நிறமாகும் வரை, அடிப்பிடிக்காமல் குறைவான தீயில் தொடர்ந்து கிளறவும்.

4. பிறகு ஏலக்காய் பொடி, முந்திரி மற்றும் திராட்சைகளைச் சேர்த்து கிளறவும். இறுதியாக அல்வாவின் மேல் உடைத்த பிஸ்தா தூவி கிண்ணங்களில் சூடாகப் பரிமாறவும்.

உணவுக்குப் பிறகு கோதுமை அல்வா பரிமாறுங்க, இல்லைன்னா இரவு நேரத்தில் இனிப்பு சாப்பிட ஆசை வந்தாலும் இதைச் செய்து உண்ணலாம்! எப்படியானாலும் இந்த ருசியான இனிப்புக்கு வயிற்றில் கொஞ்சம் இடம் ஒதுக்க மறக்காதீங்க!

இதேபோல சுவையான, சுலபமான ரெஸிப்பிகளை விதவிதமா சமைச்சு உங்க குடும்பத்தினரை அசத்தலாம்! இன்னும் நிறைய ரெஸிப்பிகளுக்கு https://www.aashirvaad.com/Recipes/RecipeList.aspx பக்கத்தைப் பாருங்க, ஓர் அட்டகாசமான சமையல் அனுபவத்துக்கு தயாராகுங்க.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism