Election bannerElection banner
Published:Updated:

முதுகுத் தண்டுக்குள் கேமரா; நூலிழைத் துல்லியத்தில் சிகிச்சை! - Dr. S. கருணாகரன்

சிகிச்சை
சிகிச்சை

மருத்துவர், நுண் கருவிகளின் துணைகொண்டு, பாதிப்படைந்த நரம்பு/சவ்வைச் சரி செய்கிறார். அப்போது முதுகில் உள்ள திசுக்களோ, எலும்புகளோ, நரம்புகளோ தொடப்படுவதில்லை. இதனால் வழக்கமான அறுவை சிகிச்சையின்போது ஏற்படுகின்ற நரம்புப் பாதிப்புப் பிரச்னை இல்லை.

அவர் ஒரு பிளம்பர். வேலை செய்யும்போது, இறுகி இருந்த பைப் ஒன்றைத் தன் முழு சக்தி கொண்டு இழுக்கிறார். அவ்வளவுதான், இடுப்புக்குக் கீழே ஆசனவாய்ப் பகுதியில் இருந்த உணர்வு முழுதும் செயலிழந்து அப்படியே கீழே சரிந்துபோகிறார். உடனடியாக கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டவரைப் பரிசோதிக்கையில், அவருக்கு 'காடா ஈக்வினா' (Cauda Equina) எனும் முதுகுத்தண்டு நரம்பு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுவோர் எமர்ஜென்சி, 6 மணி நேரத்தில் சிகிச்சை வழங்கப்பட வேண்டும். பரிசோதனையில் அவருக்கு கோவிட்-19 பாசிட்டிவ் - இப்போது மேலுமொரு சிக்கல். அவரையும் காப்பாற்றி, மெடிக்கல் டீமுக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க எண்டோஸ்கோப்பி எனப்படும் நுண்துளை கருவி மூலம் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டது. ஜெனரல் அனஸ்தீஸியா கொடுக்க முடியாத இந்தப் பேஷண்டுக்கு லோக்கல் அனஸ்தீஸியா (பாதிக்கப்பட்ட பகுதிக்கு மட்டும் மயக்க மருந்து) கொடுத்து ஆபரேஷன் செய்யப்பட்டது. அடுத்த 6 மணி நேரத்தில் இக்கட்டான நிலையிலிருந்து மீண்ட நோயாளி இப்போது நலமாக உள்ளார்.

முதுகுத்தண்டு எனும் ஹை வே...

எண்டோஸ்கோப் எனப்படும் நுண்துளை சிகிச்சைகள் இன்று அனைத்து வகை ஆபரேஷன்களையும் சுலபமாக்கிவிட்டன. உடலின் முக்கிய பாகமான முதுகுத் தண்டில் ஏற்படும் பிரச்னைகளைக் களைய 'அட்வான்ஸ்டு எண்டோஸ்கோப்பிக் ஸ்பைன் சென்டரைத்' (Advanced Endoscopic Spine Center) துவக்கியுள்ளது கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி. இதன் சிறப்புகள் பற்றி அறியும் முன், முதலில் முதுகுத் தண்டு பற்றி அறிவோம்...

சிறு சிறு கண்ணிகள் போன்ற அமைப்புடன் கூடிய 33 எலும்புகள், ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்ட சங்கிலிதான் முதுகெலும்பு. இதில், எலும்புகளுக்கு இடையில் உராய்வைத் தடுக்கும் விதமாக டிஸ்க் எனப்படும் ஜெல்லி போன்ற மிருதுவான பாகங்கள் உள்ளன. வாகனங்களில் அதிர்வுகளைத் தாங்குவதற்குப் பயன்படும் 'ஷாக் அப்சர்பர்’ போன்ற அமைப்பு இது.

இந்த முதுகெலும்புத் தொடருக்கு ஊடாக மிகவும் பாதுகாப்பான நிலையில் ஓடுகின்றன தண்டுவட நரம்புகள். உடல் உறுப்புகள் அனைத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய மூளையின் உத்தரவுகளைக் கடத்திச் செல்லும் முக்கியப் பணியைச் செய்பவை இவை. முதுகெலும்புகளுக்கு மத்தியில் உள்ள டிஸ்க் நகர்ந்து இந்த நரம்புகள் நசுக்கப்படும்போது தாங்க முடியாத வலி ஏற்படுகிறது. இதுதவிர, டிஸ்க் தேய்தல், எலும்பு தேய்தல், நரம்பில் கட்டி, தசை வலுக்குறைவு, இறுக்கமான தசைகள் - இவற்றாலும் வலி ஏற்படுகிறது. சிறுநீரகம், பித்தப்பை போன்ற உள்ளுறுப்புகளில் இருக்கும் பிரச்னையின் எதிரொலியாகவும் வலி வர வாய்ப்புண்டு.

சில முதுகு வலி கால்களுக்கும், கழுத்து வலி கைகளுக்கும் பரவும். இடது பக்கம் வலித்தால் இதய நோயாக இருக்க வாய்ப்புண்டு. அப்படியில்லை என்று சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டால், அது டிஸ்க் ரிலேட்டட் பிரச்னையாகும்.

ஏன் முதுகுத் தண்டு பாதிக்கப்படுகிறது?

* உடற்பயிற்சியின்மை

* தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் முன்பே அமர்ந்திருத்தல்.

* தினமும் இரு சக்கர வாகனங்களில் நெடுந்தொலைவு பயணம்.

* அதிக உடல் எடை

* கூன் விழுந்த நிலையில் உட்கார்ந்திருத்தல்

* உடல் தசைகள் பலவீனமடைதல்

* முதுகெலும்பு டிஸ்க்குகளில் அதீத அழுத்தம் & தேய்மானம்

* முதுமை

* விபத்துகள்

* எலும்புகளில் ஏற்படும் சத்துக் குறைவு

முதுகுத் தண்டுக்குள் கேமரா; நூலிழைத் துல்லியத்தில் சிகிச்சை! - Dr. S. கருணாகரன்

என்ன செய்கிறது எண்டோஸ்கோப்பி?

முதலில் கை கால் தசைகளை அசைக்கச் சொல்லி எங்கே வலி உள்ளது என்பதை அறிகிறோம். பிறகு எக்ஸ்ரே எடுக்கப்படும், மேலும் MRI ஸ்கேன் மூலம் நரம்புகளில் அழுத்தம், மரத்துப்போதல் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்கிறோம், இதுமட்டுமல்லாது நோயாளி என்ன உணர்கிறார் என்பதையும் அறிய வேண்டும். இந்த மூன்றையும் கொண்டு ட்ரீட்மென்ட் தீர்மானிக்கப்படுகிறது.

முதுகில் சிறு துளையிட்டு, அதன் வழியாக எண்டோஸ்கோப்பி கருவி நுழைக்கப்படுகிறது. அதன் உள்முனையில் கேமரா, லைட், நுண் அறுவைக் கருவிகள் இருக்கும். கருவியில் உள்ள லென்ஸ் முதுகெலும்பின் உள் அமைப்பைப் பல மடங்குப் பெரிதுபடுத்திக் காண்பிப்பதால் அடிப்படைக் கோளாறு தெளிவாகத் தெரிகிறது. மருத்துவர், நுண் கருவிகளின் துணைகொண்டு, பாதிப்படைந்த நரம்பு/சவ்வைச் சரி செய்கிறார். அப்போது முதுகில் உள்ள திசுக்களோ, எலும்புகளோ, நரம்புகளோ தொடப்படுவதில்லை. இதனால் வழக்கமான அறுவை சிகிச்சையின்போது ஏற்படுகின்ற நரம்புப் பாதிப்புப் பிரச்னை இல்லை. எலும்புத் தேய்மானம், கூன் விழுதல், பிறவியிலேயே முதுகெலும்பு வளைதல் போன்றவற்றுக்கும் இந்தச் சிகிச்சை நல்ல பலன் தருகிறது.

எண்டோஸ்கோப்பி பயன்கள்:

* ரத்த இழப்பு இல்லை.

* வலியில்லை.

* நோயாளிகள் அதிக காலம் மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை.

* அதிக நாள்களுக்கு ஓய்வு தேவையில்லை

* வழக்கமான பணிகளைச் சில நாட்களில் தொடரலாம்.

* நாட்பட்ட வலிகளுக்கும் தீர்வு.

குளோபல்-ன் 'அட்வான்ஸ்டு எண்டோஸ்கோப்பிக் ஸ்பைன் சென்டர்'

16 வருடங்களுக்கு முன்னரே கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியில் எண்டோஸ்கோப் சிகிச்சை வழங்க ஆரம்பித்துவிட்டோம். இப்போது மேலும் நவீனமயமாக்கப்பட்ட அட்வான்ஸ்டு எண்டோஸ்கோப்பிக் ஸ்பைன் சென்டர் மூலம் அனுபவம் வாய்ந்த எண்டோஸ்கோப் சர்ஜியன்களின் துணையைப் பெற முடியும்.

குளோபல் ஹெல்த் சிட்டியில் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் இருப்பதால், நோயாளிக்கு எந்தச் சிகிச்சை தேவை என்பதைத் துல்லியமாகச் சொல்லிவிடுவார்கள். மேலும் எண்டோஸ்கோப் அறுவை சிகிச்சை செய்வதற்கு தகுந்த பயிற்சி பெற்றிருத்தல் மிக அவசியம், இது இங்கிருக்கும் மருத்துவர்களின் பெரிய பிளஸ்.

மேல், நடு மற்றும் கீழ் முதுகுத் தண்டின் டிஸ்க் பாதிப்புகள் அனைத்தையும் துல்லியமாக எண்டோஸ்கோப் மூலம் சரி செய்கிறோம். ஸ்பைனல் ஸ்டீனோசிஸ் (Spinal Stenosis) பிரச்னை இருந்தால் முதுகுத் தண்டுக்குள் இருக்கும் நரம்புகளின் இடைவெளி இறுக்கமாகிக்கொண்டே இருக்கும். இந்தப் பாதிப்பு இருப்பவர்கள் நடக்கவே முடியாமல் சோர்ந்துவிடுவார்கள். இதையும் மூட்டுத் தேய்மானத்தையும் கூட எண்டோஸ்கோப் துணையுடன் சரி செய்ய முடியும். டிஸ்க் ப்ரொலாப்ஸ், கெனால் ஸ்டீனோசிஸ் சிகிச்சைகள், ஃபேசட் ஜாயின்ட்ஸ் எனப்படும் முதுகுத்தண்டு மூட்டுகளில் ஏற்படும் ஆர்த்தரைட்டிஸ் வலியைச் சரி செய்ய ரேடியோ ஃப்ரீக்வென்ஸி அப்லேஷன் உள்ளிட்ட செயல்முறைகள் இங்கு சிறப்பாகச் செய்யப்படுகின்றன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு