Published:Updated:

நீங்களும் எழுத்தாளர் ஆகலாம்! #AmazonPentoPublish

உங்களது படைப்புகளை இலவசமாக இனி டிஜிட்டலில் வெளியிடலாம். அமேசான் கேடிபி-யின் உலகளாவிய லட்சக்கணக்கான வாசகர்கள் உங்கள் படைப்புகளைப் படிக்கக் காத்திருக்கின்றனர்

Amazon Pen to Publish
Amazon Pen to Publish

1990ஆம் ஆண்டு, மான்செஸ்டர் நகரிலிருந்து லண்டன் கிங்க்'ஸ் கிராஸ் நகருக்கு ரயிலில் பயணிக்கும்போதுதான் முதன் முதலில் அந்தக் கதைக்கான கரு அந்த இளம் எழுத்தாளரின் மனதில் உதிக்கிறது. அப்போது அவருக்குத் தெரியாது, உலக இளைஞர்களையெல்லாம் தன்னுடைய அந்தக் கதை ஒரு மாயாஜாலக் கட்டில் கட்டப்போகிறது என்று! அந்தக் கதையின் முதல் பாகத்தின் 3 அத்தியாயங்களை எழுதி முடிக்கும் தருவாயில் அந்த எழுத்தாளர் தன்னுடைய அன்னையை இழக்கிறார், மகிழ்ச்சி தராத ஒரு திருமண பந்தத்தில் சிக்கி அல்லாடுகிறார், கணவரைப் பிரிந்து தனி மனுஷியாக குழந்தையுடன் ஏழ்மையின் பிடியில் அழுந்தி தற்கொலை செய்துகொள்ளக்கூட எண்ணுகிறார். இருப்பினும் தன்னுடைய எழுதும் பணியை அவர் நிறுத்தவே இல்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் கற்பனை எனும் உலகுக்குள் புகுந்து, எழுத்து மூலம் தன் சோகங்களை மறக்க நினைக்கிறார். இறுதியாக தாம் எழுதிய முதல் பிரதியை வெளியீட்டாளர்களுக்கு அனுப்பி வைக்க, அனைவரிடமும் வந்த ஒரே பதில் 'மன்னிக்கவும், உங்கள் புத்தகத்தை வெளியிடமுடியாது!' என்பதுதான்!

1997 ஆம் ஆண்டு ஒரு வெளியீட்டு நிறுவனம் அவர் கதையை வெளியிட சம்மதிக்கிறது. அதன்பின் நடந்ததெல்லாம் உண்மையில் மாயாஜாலம் தான்! அந்தப் புத்தகம்தான் இன்று உலகளவில் விற்பனையாகும் நம்பர் 1 தொடராக மாபெரும் சாதனை புரிந்துள்ள 'ஹாரி பாட்டர்' சீரீஸ், புத்தகத்தை எழுதிய 'ஜே.கே.ரௌலிங்' இன்று உலகப் பணக்காரர்களில் ஒருவர். இன்றுவரை சுமார் 50 கோடி ஹாரி பாட்டர் தொடர் புத்தகங்கள் உலகம் முழுக்க விற்றுத் தீர்ந்துள்ளன, இன்னும் விற்பனையின் சூடு குறைந்தபாடில்லை! ஜே.கே.ரௌலிங்-ன் வாழ்க்கை எழுத்தாளர்களுக்கு சொல்வதெல்லாம் ஒன்றுதான், 'கஷ்டங்கள் ஆயிரம் வரலாம், ஆனால் எழுத்து எனும் தவத்தை நிறுத்திவிடாதீர்கள்'!

Amazon Pen to Publish
Amazon Pen to Publish

உங்களுக்குள் இருக்கும் எழுத்தாளரை எழுப்புங்கள்!

இளைய தலைமுறைக்கு நம் எழுத்தைக் கொண்டுசெல்ல அவர்கள் அதிகம் புழங்கும் இணையத்தில், டிஜிட்டல் வழி செல்வதுதான் இலக்கியத்தின் பரிணாமமாக இருக்க முடியும். 'நம் புத்தகத்தை வெளியிட வெளியீட்டாளர் இல்லையே!' என ஜே.கே. ரௌலிங் போல இன்று நாம் பரிதவிக்க வேண்டியதில்லை! எழுதும் ஆர்வம் இருந்தால் போதும், எவரும் எழுத்தாளர் ஆகலாம் என நிரூபித்துள்ளது அமேசான் நிறுவனத்தின் 'Kindle Direct Publishing (KDP) - கிண்டில் டைரக்ட் பப்ளிஷிங் (கேடிபி)' தளம். அமேசான் கேடிபி உலகளவில் புத்தகம் வாசிக்கும் முறையையே மாற்றிவிட்டது. புகழ்பெற்ற புத்தகங்கள் மற்றும் சமகால எழுத்தாளர்களின் படைப்புகள் டிஜிட்டல் வடிவத்தில் இங்கு கிடைக்கின்றன. இதனால் அமேசான் கிண்டில் பயன்பாட்டாளர் அனைவரும் ஒரே சொடுக்கில் உலகளாவிய புத்தகங்களை டிஜிட்டல் வடிவில் சுலபமாக படித்துவிட முடிகிறது!

அமேசான் 'Pen to Publish' போட்டி...

ஒவ்வொரு வருடமும் எழுத்தாளர்களுக்கான உலகளாவிய 'Pen to Publish - பென் டூ பப்ளிஷ்' போட்டியை அமேசான் கேடிபி நடத்திவருகிறது. நீங்கள் நீண்ட நாட்களாக உருகி உருகி எழுதி, வெளியிட வேண்டும் என பத்திரமாக வைத்துள்ள படைப்புகளுக்கு விடுதலை கொடுங்கள். உங்களது படைப்புகளை இலவசமாக இனி டிஜிட்டலில் வெளியிடலாம். அமேசான் கேடிபி-யின் உலகளாவிய லட்சக்கணக்கான வாசகர்கள் உங்கள் படைப்புகளைப் படிக்கக் காத்திருக்கின்றனர். மேலும், அதன் தளத்தில் விற்பனையாகும் உங்கள் சொந்த டிஜிட்டல் படைப்புகளுக்கு 70% வரை ராயல்டி வழங்குகிறது கேடிபி. இது உலகில் எந்த வெளியீட்டாளரும் தராத ராயல்டி தொகை என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

Pen to Publish போட்டி இரண்டு பிரிவுகளாக நடைபெறுகிது. முதல் பிரிவில் முதல் 3 இடங்களைப் பிடிப்பவர்களுக்கு முறையே ரூ. 5 லட்சம், ரூ. 1 லட்சம் & ரூ. 50,000 பரிசு வழங்கப்படும். இரண்டாம் பிரிவில் முதல் 3 இடங்களைப் பிடிப்பவர்களுக்கு முறையே ரூ. 50,000, ரூ. 25,000 & ரூ. 10,000 பரிசு வழங்கப்படும். முதல் பிரிவில் தேர்வாகும் இறுதிப் போட்டியாளர்களின் படைப்புகள், 'அமேஸான் பிரைம்' வீடியோ படைப்பாக வெளிவரவும் வாய்ப்புள்ளது.

தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளில் இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன. உங்களின் படைப்புத் திறமையைக் காட்டி, உங்களுக்குள் ஒளிந்து கிடக்கும் எழுத்தாளரை உலகுக்கு அறிமுகப்படுத்துங்கள். Amazon KDP 'Pen to Publish' போட்டியில் பங்கேற்பது குறித்த அனைத்து தகவல்களையும் இங்கே க்ளிக் செய்க... www.amazon.in/pentopublish