Published:Updated:

``நீ இப்படித்தான்டா கண்ணா தூங்குற!"- முதல் பிறந்த நாளுக்கு அப்பா தந்த வித்தியாசப் பரிசு

கார்க்கிபவா

நம் அன்புக்குரியவர்களுக்கு நாம் தரும் பரிசு எல்லாமே ஸ்பெஷல்தான். ஆனால், ஒரு தந்தையாக லீ தன் குழந்தைக்குத் தந்திருக்கும் பரிசு எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்.

Sleep blanket
Sleep blanket ( twitter.com/Lagomorpho )

அமெரிக்காவைச் சேர்ந்தவர் லீ. இவர், தன் குழந்தையின் முதல் பிறந்தநாளுக்கு வித்தியாசமான ஒரு பரிசைத் தந்து இணையவாசிகளின் கவனம் ஈர்த்திருக்கிறார். பிறந்த குழந்தைகள் எப்போதும் அளவில்லாத மகிழ்ச்சியைக் கொடுப்பதுண்டு. ஒரே ஒரு சிக்கல் தூக்கம்தான். எப்போது தூங்கும், எப்போதும் எழுந்திருக்கும் எனச் சொல்லவே முடியாது. 24 மணிநேரம் அலர்ட்டாக இருக்க வேண்டும்.

குழந்தையின் முதல் பிறந்த நாளைக் கொண்டாட நாடு விட்டு நாடு போயிருக்கிறார்கள். அதனால், கடைசி சில நாள்கள் தூங்கிய நேரம் மாறியிருக்கிறது. அதுவும் பதிவாக வேண்டுமென அப்படியே சேர்த்திருக்கிறார் லீ.

இப்போதெல்லாம் குழந்தைகளின் தூக்கத்தைக் கண்காணிக்கவும் செயலிகள் வந்துவிட்டன. ஒரு குழந்தை எப்போது, எப்படி, எந்த அளவுக்குத் தூங்குகிறது என்பதை இவை கண்காணித்துச் சொல்லிவிடும். லீ, அப்படி ஒரு செயலி மூலம் தன் குழந்தை பிறந்ததிலிருந்து ஒரு வருடத்துக்கு எப்படியெல்லாம் தூங்கியது என்ற டேட்டாவை எடுத்திருக்கிறார். பின், தன் தொழில்நுட்ப மூளையினால் ஜாவா மற்றும் பைத்தான் (Python) மூலம் அதை விஷுவலாக ஒரு கிராஃப் போல மாற்றினார். அதை டிசைனாக வைத்து குழந்தைக்காக ஒரு பிளாங்கெட்டை உருவாக்கினார்.

42* 45 இன்ச் அளவிளான இந்த பிளாங்கெட்டில் 1,85,000 தையல்கள் உள்ளன. ஒவ்வொரு வரிசையும் அந்தக் குழந்தையின் ஒருநாள் தூக்கத்தின் ரிப்போர்ட் கார்டு. கிட்டத்தட்ட 3 மாதம் செலவழித்து இந்த பிளாங்கெட்டை லீ உருவாக்கியிருக்கிறார். குழந்தையின் முதல் பிறந்த நாளைக் கொண்டாட நாடு விட்டு நாடு போயிருக்கிறார்கள். அதனால், கடைசி சில நாள்கள் தூங்கிய நேரம் மாறியிருக்கிறது. அதுவும் பதிவாக வேண்டுமென அப்படியே சேர்த்திருக்கிறார் லீ.

நம் அன்புக்குரியவர்களுக்கு நாம் தரும் பரிசு எல்லாமே ஸ்பெஷல்தான். ஆனால், ஒரு தந்தையாக லீ தன் குழந்தைக்குத் தந்திருக்கும் பரிசு எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்.